Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் கடன் தீர செய்ய வேண்டிய கல் உப்பு பரிகாரம்!!

கடன் தீர செய்ய வேண்டிய கல் உப்பு பரிகாரம்!!

வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் நிறைய பேர் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். கடன் என்ற மூன்று எழுத்தில் நிறைய கஷ்டங்கள் நிறைந்திருக்கும். நிம்மதியாக வாழ முடியாது நிம்மதியாக சாப்பிட முடியாது. நிம்மதியாக ஒரு நாளை கூட கடக்க முடியாது கடன் வாங்கி இருந்தால் தெரியாத எண்களில் இருந்து எல்லாம் அழைப்பு வரும். அந்த அளவிற்கு கடன் கொடுத்தவர்களை பார்த்து நாம் பயப்பட வேண்டிய சூழல் ஏற்படும். அந்த கடன் தொல்லையில் இருந்து மீள்வதற்கு எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

கடன் தீர கல் உப்பு பரிகாரம்

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு தாம்பூல தட்டை எடுத்து அதில் மூன்று கைப்பிடி அளவு உப்பை போட வேண்டும். வலது கை ஆள்காட்டி விரலால் அந்த உப்பை நீங்கள் வாங்கிய கடன் தொகையை எழுத வேண்டும். உதாரணமாக ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் என்ற என்னை நீங்கள் உப்பின் மேலே எழுத வேண்டும். பிறகு அந்த ஒப்பிற்கு முன்பாக அமர்ந்து குலதெய்வத்தையும் முருகப்பெருமானையும் மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்ய வேண்டும்.

பரிகாரத்திற்கு பயன்படுத்திய உப்பு

நாம் வாங்கிய கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு நம்பிக்கையோடு கண்களை மூடி வேண்டிக் கொண்டு அந்த உப்பை எடுத்து ஒரு ஜாடியில் அல்லது ஒரு சின்ன மண் குடுவையில் கொட்டி விடலாம். ஒரு மூடி போட்டு இந்த உப்பை மூடி பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும் பிறகு அடுத்த செவ்வாய்க்கிழமை இந்த உப்பை நீரில் போட்டு கரைத்து உப்பு கரைவது போல கடனும் கரைய வேண்டும். என்று முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து முடித்தாலே உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறைய தொடங்கும். ஓரின மாதங்களில் உங்களுடைய கடன் சுமை குறைந்து விடும் கடன் பிரச்சனை இருக்கும். போதெல்லாம் முருக பெருமானையும் குல தெய்வத்தையும் நம்பி இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதனையும் படியுங்கள் : கடன் சுமையை குறைக்கும் நவதானிய பரிகாரம்!