Home அசைவம் நாவூறும் வித்தியாசமா இளநீர் சிக்கன் ரெசிபி இப்படி செய்து பாருங்கள், அருமையாக இருக்கும்!!!

நாவூறும் வித்தியாசமா இளநீர் சிக்கன் ரெசிபி இப்படி செய்து பாருங்கள், அருமையாக இருக்கும்!!!

சிக்கன்ல பல வெரைட்டிகள் இருக்கு விதவிதமாக சிக்கன் எல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். இன்னைக்கு நம்ம செய்ய போற சிக்கன் இளநீர் சிக்கன் அதாவது இளநீர் கூடுல சிக்கன் வச்சி நெருப்பு ல வேக வைக்க போறோம். ரொம்பவே ஈசியா செஞ்சிடாலாம் என்ன கொஞ்சம் நெருப்பு மூட்டி இந்த இளநீர் கூட வேக வைக்கணும் அது மட்டும் தான் இதுல வேலையை. என்ன தான் இருந்தாலும் ரொம்பவே டேஸ்டாவும் சுவையாகவும் இருக்கும் இந்த இளநீர் சிக்கன்.

-விளம்பரம்-

இந்த சுவையான சிக்கனை நம்ம சைடிஷா வெச்சு சாப்பிடும்போது அவ்வளவு சூப்பரா இருக்கும். நீங்க இது எந்த சாதத்துக்கு கூட வேணாலும் சேர்த்து வைத்து சாப்பிடலாம் . அவ்வளவு சுவையான இந்த இளநீர் சிக்கன். எப்படி சுலபமா செய்யறது நம்ம தெரிஞ்சுக்க இருக்கோம். இளநீர் சிக்கன் சேர்த்து எப்படி சுவையா செய்வது. எல்லாமே ரொம்ப ரொம்ப சுலபம்தான் ஆனால் அதை வேக வைக்கிறது மட்டும்தான் கொஞ்சம் வேலையா இருக்கும்.

ஆனால் நீங்க செஞ்சுட்டீங்கன்னா சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டான ஒரு சிக்கன் ரெசிபி கிடைச்சிட்டும். இதை நம்ம இளநீர் கூட சேர்த்து செய்யறதுனால ஹீட் ரொம்பவே கம்மியா தான் நமக்கு அப்சர்வ் ஆகும். அது இளநீர் குளிர்ச்சியா இருக்கறதுனால சிக்கனும் இளநீரும் சேர்ந்து புது மாதிரியான ஒரு சுவை மட்டும் கிடையாது உடலுக்கு ஒரு புது மாதிரியான ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த சுவையான இளநீர் சிக்கன் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

இளநீர் சிக்கன் | Tender coconut chicken recipe in tamil

இந்த சுவையான இளநீர் சிக்கனை நம்ம சைடிஷா வெச்சு சாப்பிடும்போது அவ்வளவு சூப்பரா இருக்கும். நீங்க இது எந்த சாதத்துக்கு கூட வேணாலும் சேர்த்து வைத்து சாப்பிடலாம் . அவ்வளவு சுவையான இந்த இளநீர் சிக்கன். எப்படி சுலபமா செய்யறது நம்ம தெரிஞ்சுக்க இருக்கோம். இளநீர் சிக்கன் சேர்த்து எப்படி சுவையா செய்வது. எல்லாமே ரொம்ப ரொம்ப சுலபம்தான் ஆனால் அதை வேக வைக்கிறது மட்டும்தான் கொஞ்சம் வேலையா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time30 minutes
Total Time40 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Allepey Chicken Curry, Andhra Chicken Fry, Andhra Pepper Chicken, ஆந்திரா ஸ்பைஸி சிக்கன்
Yield: 5 People
Calories: 160kcal
Cost: 240

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 இளநீர்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை நறுக்கி சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இளநீரை சீவி விட்டு அதில் உள்ள இளநீரை மட்டும் வெளியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு நறுக்கி வைத்துள்ள சிக்கனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு சிக்கனுக்கு தேவையான உப்பு சேர்த்து பிசைந்து வைத்துக்கொண்டு அதில் காய்ந்த மிளகாயை அப்படியே சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு இளநீரை வடித்து விட்டு வைத்துள்ள இளநீர் கூடில் பிசைந்து வைத்துள்ள சிக்கனை முழுவதும் வைத்து மேலே ஒரு வாழை இலையை சொருவி வைத்து கட்டி விட வேண்டும்.
  • பின்பு நெருப்பை மூட்டி அதில் இந்த இளநீர் கூடை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.
  • நெருப்பில் இளநீர் நன்றாக கருகி வெந்த பிறகு இளநீர் கூடை தனியாக எடுத்து அதில் சொருகி வைத்துள்ள வாழையிலேயே திறந்து விட்டு உள்ளே உள்ள சிக்கனை எடுத்து பரிமாறினால் இளநீர் சிக்கன் தயார்.

Nutrition

Calories: 160kcal | Carbohydrates: 15g | Protein: 18g | Fat: 17g