நெத்திலி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில் தெருவுக்கு கூட போகும்னு சொல்லலாம். அந்த வகையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான மீன் ரொம்ப பிடிக்கும். பாருங்கள் கட்லா மீன் ஜிலேபி மீன் முரல் மீன் மத்தி மீன் அப்படின்னு எக்கச்சக்கமான மீன் இருந்தாலும் குட்டி குட்டியா இருக்கக்கூடிய நெத்திலி மீனுக்கு நிறைய ஃபேன்ஸ் இருப்பாங்க.

-விளம்பரம்-

இந்த நெத்திலி மீன் வச்சு நம்ம குழம்பு செஞ்சாலும் ப்ரை செஞ்சாலும் ரொம்பவே சூப்பரா இருக்கும். நெத்திலி மீன் வச்சு குழம்பு வச்சா அதுல கொஞ்சம் நல்லெண்ணெய் ஊத்தி குடிச்சா இருமல் சளி எது இருந்தாலும் உடனே சரியாகிடும். குடிக்கிறதுக்கும் குழம்பு ரொம்ப ருசியா இருக்கும். இப்ப நம்ம வைக்கப்போற இந்த நெத்திலி மீன் குழம்பு ரொம்ப  சிம்பிளா அதே நேரத்துல ரொம்ப  டேஸ்ட்டா இருக்கும்.

- Advertisement -

இந்த நெத்திலி மீன் குழம்பு நாலு நாளைக்கு கூட சூடு பண்ணி சூடு பண்ணி சாப்பிடலாம் நெத்திலி மீன் ஓட டேஸ்ட்ட அந்த குழம்புல இறங்கி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒவ்வொரு திறனும் ஒவ்வொரு மாதிரியா மீன் குழம்பு வச்சு சாப்பிடுவீங்க. அந்த வகையில் இப்படி ஒரு தடவை நெத்திலி மீன் குழம்பு வச்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.

சாதம் போட்டு அதுல நெத்திலி மீன் குழம்பு மீன் ஓட அள்ளி வச்சு சாப்பிடும்போது அது ஒரு தனி சுகம் அப்படின்னு சொல்லலாம். கூடவே நெத்திலி பிரையும் வைத்து சாப்பிட்டால் சொர்க்கமா இருக்கும். இப்ப வாங்க சூப்பரான இந்த நெத்திலி மீன் குழம்பு அட்டகாசமான சுவைல எப்படி வைக்கிறது என்று பார்க்கலாம்

Print
4 from 1 vote

நெத்திலி மீன் குழம்பு | Nethili meen kulambu in Tamil

நெத்திலி மீன் குழம்பு நாலு நாளைக்கு கூட சூடு பண்ணிசூடு பண்ணி சாப்பிடலாம் நெத்திலி மீன் ஓட டேஸ்ட்ட அந்த குழம்புல இறங்கி சாப்பிடுவதற்குஅவ்வளவு ருசியா இருக்கும். ஒவ்வொரு திறனும் ஒவ்வொரு மாதிரியா மீன் குழம்பு வச்சு சாப்பிடுவீங்க.அந்த வகையில் இப்படி ஒரு தடவை நெத்திலி மீன் குழம்பு வச்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாஉங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சாதம் போட்டு அதுல நெத்திலி மீன் குழம்பு மீன் ஓட அள்ளிவச்சு சாப்பிடும்போது அது ஒரு தனி சுகம் அப்படின்னு சொல்லலாம். கூடவே நெத்திலி பிரையும்வைத்து சாப்பிட்டால் சொர்க்கமா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Nethili Meen kulambu
Yield: 5
Calories: 128kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ நெத்திலி மீன்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • புளி பெரிய எலுமிச்சை பழ அளவு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 3 பச்சை மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் நெத்திலி மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும் அதனுடன் தட்டிய பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகவதக்கவும்
  • தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து அந்த விழுதையும் சேர்த்து வதக்கவும்
  • எலுமிச்சை பழ அளவு புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்
  • தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக 15 நிமிடங்களுக்கு கொதிக்கவைக்கவும்
  • குழம்பு நன்றாககொதித்த உடன் நெத்திலி மீனை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்த பின்னர் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 33.3g | Protein: 14g | Sodium: 35mg | Potassium: 186mg

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான மீன் மிளகு மசாலா இப்படி செஞ்சி பாருங்க ?

-விளம்பரம்-