- Advertisement -
சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், சாப்பிடும் பொது இந்த மீன் மிளகு மசாலா செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். அசைவ பிரியர்களுக்கு ஏற்றவாறு இந்த மீன் மசாலா காரசாரமாக இருக்கும் இதை ஒரு முறை வார இறுதியில் செய்து பாருக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களும்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : காரசாரமான வஞ்சரம் மீன் ப்ரை செய்வது எப்படி ?
- Advertisement -
மிகவும் விரும்பி சாம்பிடுவார்கள் அடுத்தமுறையும் இதை செய்து தர சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த காரசாரமான மீன் மிளகு மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
.
மீன் மிளகு மசாலா | Fish Pepper Fry Recipe In Tamil
சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், சாப்பிடும் பொது இந்த மீன் மிளகு மசாலா செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். அசைவ பிரியர்களுக்கு ஏற்றவாறு இந்த மீன் மசாலா காரசாரமாக இருக்கும் இதை ஒரு முறை வார இறுதியில் செய்து பருக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டிருக்க செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து செய்யவும்.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- ½ கிலோ வறுக்கக்கூடிய மீன்
- 200 கிராம் வெங்காயம் நறுக்கியது
- 4 பச்சை மிளகாய் கீறியது
- 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் சீரகம்
- 4 டீஸ்பூன் மிளகுத்தூள்
- 5 காய்ந்த மிளகாய்
- 1 கப் கொத்தமல்லி இலை
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய் தேவைக்கேற்ப
- கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
- முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு, இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.
- நன்றாக கிளறியதும், மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும்.
- பிறகு மீன் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.
- பிறகு அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
- இப்பொழுது சுவையான மீன் மிளகு மசாலா தயார்.
Nutrition
Serving: 4g | Protein: 32g | Fat: 18g | Saturated Fat: 12g | Cholesterol: 21mg | Sodium: 61mg | Potassium: 10mg | Vitamin C: 6mg | Calcium: 1mg | Iron: 1mg