சக்தி வாய்ந்த அம்மன் துர்க்கையின் வழிபாடு!
செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளி கிழமைகள் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் நாம் நினைத்தது நடக்கும் என்று பலர் கூற கேட்டிருப்போம். இதனை நிறைய பேர் கடைபிடித்து அவர்களுடைய ஆசைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றியும் உள்ளார்கள். மேலும் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபா
செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளி கிழமைகள் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் நாம் நினைத்தது நடக்கும் என்று பலர் கூற கேட்டிருப்போம். இதனை நிறைய பேர் கடைபிடித்து அவர்களுடைய ஆசைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றியும் உள்ளார்கள். மேலும் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்பவர்களுக்கு துன்பம் துயரம் என எதுவுமே நேராது.
ராகு கால வழிபாடு
ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது ராகுவையும் சேர்த்து வழிபாடு செய்வதற்கு சமம். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு அகழ்விளக்கு நெய் தீபம் என ஏதாவது ஒன்றை ஏற்றி மனதார மனம் உருகி துர்கை அம்மனை வழிபட்டு வந்தால் நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல்களை துர்க்கை அம்மன் நிறைவேற்றுவார்.
ராகு காலத்தில் ஏற்ற வேண்டிய விளக்கு
செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியிலிருந்து 4.30 மணி வரையில் ராகு நேரம் இருக்கும். புதன்கிழமை அதிகாலை 3 மணியிலிருந்து 4.30 மணி வரை ராகு கால நேரம். வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியில் இருந்து 12 மணி வரை ராகு கால நேரம் இருக்கும். எனவே இந்த நேரத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். மேலும் அந்த நேரத்தில் ராகுவையும் வழிபட்டு வரலாம். எலுமிச்சம் பழ விளக்கு போட்டால் எலுமிச்சம் பழத்தை நறுக்கும் போது “ஓம் தூம் துர்காயை நமஹ” என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே எலுமிச்சம் பழத்தை நறுக்கி தலைகீழாக திருப்பி எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றலாம்.
தீபம் ஏற்ற பயன்படுத்த வேண்டிய எண்ணெய்
ஒரு பாட்டிலில் இலுப்பை எண்ணெய் செம்பருத்தி தைலம் மருதாணி தைலம் மூன்றையும் சமமான அளவில் கலந்து வைத்து கொள்ளுங்கள். எலுமிச்சம் பலவிளக்கில் அந்த எண்ணையை போட்டு மூன்று திரிகளை ஒன்றாக திரித்து விளக்கு ஏற்றி உங்களுடைய வேண்டுதல்களை துர்க்கை அம்மனிடம் வைத்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். கோவில் சென்று இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். வீட்டில் இந்த விளக்கை ஏற்றுவதில் எந்த பயனும் இல்லை.
இதனையும் படியுங்கள் : உங்கள் வாழ்வில் அதிசயம் நடக்க காமாட்சி அம்மன் விளக்கில் இந்த 1 பொருளை போட்டு மட்டும் தீபம் ஏற்றுங்கள்!