முழுக்க முழுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்த தூதுவளை குழம்பு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பொதுவாக பலரும் பல வகையான குழம்புகளை வழக்கமாக சுவைத்திருப்பார்கள். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான தூதுவளை குழம்பு. பாரம்பரிய மருத்துவ குணம் உள்ள தாவரங்களில் தூதுவளை கீரைக்கு முக்கிய இடம் உண்டு. சளி இருமல் உட்பட பல நோய்களுக்கு தீர்வளிக்கும் இந்த கீரை இயற்கை மர

By Prem Kumar · 28/1/2024

பொதுவாக பலரும் பல வகையான குழம்புகளை வழக்கமாக சுவைத்திருப்பார்கள். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான தூதுவளை குழம்பு. பாரம்பரிய மருத்துவ குணம் உள்ள தாவரங்களில் தூதுவளை கீரைக்கு முக்கிய இடம் உண்டு. சளி இருமல் உட்பட பல நோய்களுக்கு தீர்வளிக்கும் இந்த கீரை இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், எலும்பகளுக்கு நன்மை அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பொருளாக உள்ள தூதுவளை வாதம், பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக உள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் நம்மில் பலருக்கும் சளி, இருமல் தொல்லை அதிக அளவில் இருக்கும் அப்பொழுது இந்த தூதுவளையில் ஏதேனும் ஒரு உணவு செய்து சாப்பிட்டால் சளி தொல்லைகளில் இருந்து விடுபடலாம். பருவநிலையில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களால் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, பேதி என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

இதுபோன்ற சூழல்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் தேவை. இது போன்ற சூழ்நிலைகளில் நாம் ஆரோக்கியமான உணவு முறைகளை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். அவற்றில் ஒன்றுதான் இந்த தூதுவளை குழம்பு, வாரத்தில் ஒருமுறையேனும் இந்த குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் இருக்கவே இருக்காதாம். அப்படிப்பட்ட இந்த தூதுவளையில் குழம்பு எப்படி தாயார் செய்யலாம் என்று பார்க்கலாம். பொதுவாகவே தூதுவளை கீரையை சாப்பிடு என்று சொன்னால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அதிலும் தூதுவளைக் கீரையை எல்லாம் வேக வைத்தோ, சூப் வைத்தோ, ரசம் வைத்தோ கொடுத்தால் கட்டாயம் குடிக்க மாட்டார்கள். தூதுவளையை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு தூதுவளையை இப்படியும் குழம்பு செய்து கொடுக்கலாம். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

இதனையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு பக்காவான தூதுவளை சட்னி இப்படி ஒரு முறை செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Recipes AMP · Quick view
View full