இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும்.
இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். அதுமட்டுமல்லாமல் மழைக்காலம் தொடங்கி விட்டது. திடீர், திடீரென்று வானிலை மாறுகிறது. நன்கு வெயிலடிக்கிறது. சிறிது நேரத்தில் கொட்டுகிறது மழை. பருவநிலையில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களால் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, பேதி என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதுபோன்ற சூழல்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் தேவை.
இது போன்ற சூழ்நிலைகளில் நாம் ஆரோக்கியமான உணவுமுறைகளை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். அவற்றில் ஒன்றுதான் தூதுவளை துவையல், வாரத்தில் ஒருமுறையேனும் இந்த துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் சளி , இருமல் இருக்கவே இருக்காதாம். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பொருளாக உள்ள தூதுவளை வாதம், பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக உள்ளது. அப்படிப்பட்ட இந்த தூதுவளையில் சட்னி எப்படி தாயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தூதுவளை சட்னி | Thuthuvalai Chutney Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 கப் தூதுவளை
- 1/2 கப் சின்ன வெங்காயம்
- 6 பல் பூண்டு
- 1 துண்டு புளி
- 3 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/4 கப் தேங்காய்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க :
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் தூதுவளை இலையை சுத்தம் செய்து கழுவி, முட்களை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காய், சீரகம், வர மிளகாய், பூண்டு, புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பின் வெங்காயம் சேர்த்து வதக்கி, தூதுவளை இலைகளை சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்.
- இவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி கொள்ளவும்.
- ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
- அவ்வளவுதான் மிகவும் சுவையான, சத்தான தூதுவளை இலை சட்னி தயார்.
- இந்த சட்னி சாதத்துடன் கொஞ்சம் நெய் சேர்த்து கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட ஆந்திரா ஃபேமஸ் வெள்ளரிகாய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!