Home சட்னி இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட ஆந்திரா ஃபேமஸ் வெள்ளரிகாய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட ஆந்திரா ஃபேமஸ் வெள்ளரிகாய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

ஆந்திராவில ரொம்பவே பேமஸான வெள்ளரிகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். இந்த வெள்ளிரிகாய் சட்னியை நீங்க வெள்ளரி சட்னி சொல்லலாம் இல்ல வெள்ளரி பச்சடின்னு சொல்லலாம். இந்த சுவையான ஆந்திரா வெள்ளரிக்காய் சட்னி சாதத்தோடும் சப்பாத்தி இட்லி தோசையுடனும் சாப்பிட ரொம்பவே சுவையா இருக்கும். இந்த வெள்ளரிக்காய் சட்னி உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த வெள்ளரிக்காய் சட்னியை எதை ஒரு உணவு கூடையுமே சேர்த்து சைடிஷா வச்சு சாப்பிடலாம்.

-விளம்பரம்-

 ரொம்ப டேஸ்டான இந்த வெள்ளரி சட்னி செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். இது செய்யறதுக்கு அதிகமான பொருட்கள் தேவையேபடாது. வீட்ல இருக்குற குறைந்து பொருட்களை வைத்து நல்ல டேஸ்ட் எந்த வெள்ளரி சட்னியும் ரெடி பண்ணிடலாம். சுவையான இந்த வெள்ளரி சட்னி எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். ஏன்னா இது டேஸ்ட்டா இருக்கிறதோட மட்டுமில்லாமல் வித்தியாசமாக இருக்கிறதுனால இந்த வெள்ளரி சட்னி எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.

வீட்ல இருக்குற எல்லாருமே இந்த வெள்ளரி சட்னி ரொம்பவே டேஸ்டா இருக்கு எங்க இருந்து கத்துக்கிட்டீங்க அப்படின்னு கண்டிப்பா தெரிஞ்சிக்க ஆசைப்படுவாங்க. அது மட்டும் இல்லாம இந்த வெள்ளரி சட்டினிய அடிக்கடி உங்களை செய்ய சொல்லி தொல்லை பண்ணிட்டு இருக்க போறாங்க. அந்த அளவுக்கு ருசியா இருக்கும் எந்த வெள்ளரிக்காய் சட்னி சரி வாங்க இந்த வெள்ளரி சட்னி எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம்.

Print
5 from 1 vote

ஆந்திரா வெள்ளரிகாய் சட்னி | Andhra Cucumber Chutney

வெள்ளரி சட்னி செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். இது செய்யறதுக்கு அதிகமான பொருட்கள் தேவையேபடாது. வீட்ல இருக்குற குறைந்து பொருட்களை வைத்து நல்ல டேஸ்ட் எந்த வெள்ளரி சட்னியும் ரெடி பண்ணிடலாம். சுவையான இந்த வெள்ளரி சட்னி எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். ஏன்னா இது டேஸ்ட்டா இருக்கிறதோட மட்டுமில்லாமல் வித்தியாசமாக இருக்கிறதுனால இந்த வெள்ளரி சட்னி எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Breakfast, chutney
Cuisine: andhra
Keyword: Andhra Cucumber Chutney
Yield: 4
Calories: 88kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் வெள்ளரிக்காய்
  • 1/4 கப் வேர்க்கடலை
  • 1 ஸ்பூன் வெள்ளை எள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 2 தக்காளி
  • 6 பல் பூண்டு
  • 3 பச்சைமிளகாய்
  • புளி திராட்சை அளவு
  • 12 வெங்காயம்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெள்ளரிக்காயை தோல் சீவி நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்காமல் வேர்க்கடலை, வெள்ளை எள் இரண்டையும் வறுத்தெடுக்க வேண்டும். வறுத்தெடுத்த இரண்டையும் ஆற வைக்கவும்.
  •  பிறகு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சீரகம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்றாக குழைய வதக்க வேண்டும். பிறகு அதில் பச்சை மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைக்க வேண்டும்.
     
  • முதலில் மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை மற்றும் வெள்ளை எள்ளை சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அந்த பொடியில் வதக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, புளி, சீரகத்தை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காயை சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்து வெள்ளரி சட்னியை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்
  •  பிறகு அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் சேர்த்து நன்றாக கலந்து விட்டு சாதம், சப்பாத்தியுடன் பரிமாறினால்  சுவையானவெள்ளரிக்காய் சட்னி ஆந்திரா ஸ்டைலில் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 88kcal | Carbohydrates: 1.9g | Protein: 0.9g | Fat: 0.1g | Potassium: 147mg | Calcium: 16mg

இதையும் படியுங்கள் : தந்தூரியுடன் தொட்டுக்க கொடுக்கும் புதினா சட்னி எப்படி நாம் வீட்டிலேயே எப்படி செய்வது ? மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு பக்காவா இருக்கும்!