தந்தூரியுடன் தொட்டுக்க கொடுக்கும் புதினா சட்னி எப்படி நாம் வீட்டிலேயே எப்படி செய்வது ? மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு பக்காவா இருக்கும்!

- Advertisement -

பெரிய பெரிய ரெஸ்டாரன்ட் முதல் அனைத்து விதமான ஹோட்டல்களிலும் தந்தூரியுடன் கொடுக்கும் மயோனைஸ் எல்லோருக்கும் பிடிக்கும். அதே போல அதனுடன் கொடுக்கும் இந்த புதினா சட்னிக்கும் பெரும்பாலானோர் மிகவும் பிடிக்கும். நம் வீட்டிலேயே எளிதாக ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இந்த தந்தூரி புதினா சட்னி ரெசிபி எப்படி எளிதாக தயாரிக்க போகிறோம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

-விளம்பரம்-

சாட் ஐட்டங்கள் மட்டுமல்லாமல் நம் வீட்டில் மாலையில் பஜ்ஜி, போண்டாவுடன் தொட்டு சாப்பிடவும் இது அவ்வளவு டேஸ்ட்டியாக இருக்கும். சாதாரணமாக பிரட் சாண்ட்விச், பர்கர் செய்யும் போது கூட இந்த சட்னி செய்து கொடுத்தால் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும். மேலும் இதை தந்தூரி, கிரில் சிக்கன், டிக்கா, பிரெஞ்ச் ப்ரை என்று நீங்கள் விரும்பும் சாட் ஐட்டங்களில் விரும்பியபடி தொட்டு சாப்பிடலாம். இதை கடையில் வாங்கி சாப்பிட்டவர்கள், இனி ஒரு முறை வீட்டிலும் செய்து பாருங்கள், நீங்களே ரசித்து ருசித்து சாப்பிடுவீங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -
Print
No ratings yet

புதினா சட்னி | Mint Chutney Recipe In Tamil

சாட் ஐட்டங்கள் மட்டுமல்லாமல் நம் வீட்டில்மாலையில் பஜ்ஜி, போண்டாவுடன் தொட்டு சாப்பிடவும் இது அவ்வளவு டேஸ்ட்டியாக இருக்கும்.சாதாரணமாக பிரட் சாண்ட்விச், பர்கர் செய்யும் போது கூட இந்த சட்னி செய்து கொடுத்தால்தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும். மேலும் இதை தந்தூரி, கிரில் சிக்கன், டிக்கா, பிரெஞ்ச்ப்ரை என்று நீங்கள் விரும்பும் சாட் ஐட்டங்களில் விரும்பியபடி தொட்டு சாப்பிடலாம்.இதை கடையில் வாங்கி சாப்பிட்டவர்கள், இனி ஒரு முறை வீட்டிலும் செய்து பாருங்கள், நீங்களேரசித்து ருசித்து சாப்பிடுவீங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
 
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: Mint Chutney
Yield: 4
Calories: 99.93kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி புதினா இலைகள்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 3 பச்சை மிளகாய்
  • உப்பு  தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் வறுத்து அரைத்த சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சாட் மசாலா
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 2 இன்ச் இஞ்சி
  • 3 ஸ்பூன் கெட்டி தயிர்

செய்முறை

  • தந்தூரி புதினா சட்னி செய்வதற்கு முதலில் ஒருகைப்பிடி அளவிற்கு சுத்தமான பிரஷ் ஆக இருக்கும் புதினா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.இதை நன்கு அலசி சுத்தம் செய்து உதறி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இதே போல ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லி தழையைஎடுத்து நன்கு சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேருங்கள். இந்த இலைகளுடன் மூன்று பச்சைமிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
  •  
    வெறும் மிளகாய் தூள் அரை ஸ்பூன், வறுத்து அரைத்தசீரகத்தூள் 1/2 ஸ்பூன், சாட் மசாலா அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும்.
  • இரண்டு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கிசீவி எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
     
  • பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சைசாறு சேர்த்து மிக்ஸியை மூடி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்
  • அரைத்து எடுத்த இந்த சட்னியுடன் மூன்று ஸ்பூன்அளவிற்கு கெட்டியாக இருக்கும். தயிரை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து எடுங்கள்.சூப்பரான இந்த மின்ட் சட்னி காரசாரமாக அருமையாக இருக்கும்.
  • மேற்கூறிய அளவு களின் படி சரியாக நீங்கள் சேர்த்தால்ருசியும் சரியாக இருக்கும். இதை பச்சையாக செய்வதால் கொஞ்சம் அளவுகள் மாறினாலும் ருசிமாறிவிடும். மயோனைஸ் விரும்பிகள், இந்த மின்ட் சட்னியையும் அதிகம் விரும்புவது உண்டு.

Nutrition

Serving: 600g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Fat: 2.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg