பண விரயத்தை குறைக்கும் ஒரு சில குறிப்புகள்
காலை எழுந்ததும் பரபரப்பாக கிளம்பி மாலை மிகவும் சோர்வாக வீடு திரும்பும் வரையிலும் கடினமாக உழைப்பது பணம் சம்பாதிப்பதற்காக தான் அப்படி நாம் பணத்தை சம்பாதித்தாலும் பணம் ஒரு சிலருடைய கைகளில் தங்கவே தங்காது. அவர்கள் என்னென்ன விஷயங்களை செய்ததால் அவர்களுக்கு பணவிரயம் ஏற்பட்டிருக்கும் என்
காலை எழுந்ததும் பரபரப்பாக கிளம்பி மாலை மிகவும் சோர்வாக வீடு திரும்பும் வரையிலும் கடினமாக உழைப்பது பணம் சம்பாதிப்பதற்காக தான் அப்படி நாம் பணத்தை சம்பாதித்தாலும் பணம் ஒரு சிலருடைய கைகளில் தங்கவே தங்காது. அவர்கள் என்னென்ன விஷயங்களை செய்ததால் அவர்களுக்கு பணவிரயம் ஏற்பட்டிருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பணவிரயம்
பண விரயத்தை குறைத்து பண வரவை அதிகரிக்க பலவிதமான வழிபாடுகளையும் பரிகாரங்களையும் நாம் செய்து வந்தாலும் வீட்டில் பண விரயம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் பணத்தை சேமிக்கவே முடியாது. நாம் வீட்டில் பண வரவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் சேமிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் நம்முடைய கடினமான காலங்களில் அது நமக்கு உதவியை செய்யும். ஆனால் நாம் ஒரு சில தவறுகளை வீட்டில் செய்வதால் தான் பணம் விரயம் ஆகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தவறுகளைப் பற்றி பார்க்கலாம்.
பணவிரயத்தை குறைக்க கூடிய சில குறிப்புகள்
நம் வீட்டில் செய்யக்கூடிய ஒரு சில செயல்களால் நம்முடைய பணம் வரையும் ஆகும் அந்த வகையில் தண்ணீரை யார் சீக்கிரமாக செலவு செய்கிறார்களோ அவர்களிடத்தில் பணம் வரவும் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். அந்த குடும்பத்தில் பண விரயம் ஒருபோதும் ஆகாது எனவே தண்ணீரை வீணாக்காமல் தண்ணீர் சொட்டாமல் கூட பார்த்துக் கொள்ள வேண்டும் அப்படி தண்ணீர் சொட்டினால் கூட அந்த வீட்டில் உள்ள சேமிப்புகள் கரையும் என்று கூறப்படுகிறது.
மாத மாதம் சம்பளம் வாங்கியதும் அந்த சம்பள பணத்தை பூஜை அறையில் சாமி படங்களுக்கு முன்பாக வைப்பது மிகவும் தவறான ஒன்று. அப்படி நாம் வைப்பதால் வீட்டில் பணம் சேராமல் பணம் விரையம் ஆகிக்கொண்டே இருக்கும் எனவே பணத்தை ஒருபோதும் சாமி படங்களுக்கு முன்பாக வைத்து சாமி கும்பிடக் கூடாது அதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட பணத்தை எடுத்து பூஜையறையில் இருக்கும் சாமி உண்டிகளில் போட்டு விடலாம். மீதி இருக்கக்கூடிய பணத்தை சிவப்பு நிற துணிகள் சுற்றி வடமேற்கு மூலையில் இருக்கக்கூடிய பீரோவில் வைக்க வேண்டும். பீரோ வடமேற்கு மூலையில் இல்லை வடக்கு பார்த்த மாதிரி இல்லை என்று நினைப்பவர்கள் அவர்களுடைய முதுகு வடக்கு பார்த்தவாறு இருப்பது போல் நின்று பீரோவில் அந்த சிவப்பு நிற துணிகள் சுற்றிய பணத்தை வைத்து விடலாம்.
தண்ணீரை எப்படி சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்கின்றோமோ அதேபோலத்தான் வீட்டில் உள்ள மின்சாரத்தையும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். தேவையில்லாத இடங்களில் மின்சாரத்தை உபயோகப்படுத்தாமல் தேவைக்கு மட்டும் மின்சாரத்தை உபயோகப்படுத்த வேண்டும். ஒரு சில வீடுகளில் எப்பொழுதும் மின்விளக்குகள் இருந்து கொண்டே இருக்கும் அப்படி இருந்து கொண்டே இருந்தால் பணம் வீட்டில் தங்காது அதேபோல் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறி சுற்றிக்கொண்டேவும் இருக்கக் கூடாது அப்படி இருந்தாலும் கூட பணம் வீட்டில் தங்காமல் பண விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். எனவே சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதனையும் படியுங்கள் : உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? 3 விரலி மஞ்சள் கையில் இருந்தால் மட்டும் போதும் பண வரவு அதிகரிக்கும்!