இன்றைய ராசிபலன் 07 நவம்பர் 2026: 12 ராசிகளுக்கும் பலன்கள் எப்படி?
இன்றைய ராசிபலன் 07 நவம்பர் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள், தொழில், பணம், குடும்பம், ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
இன்று முழு உற்சாகத்துடன் உழைப்பீர்கள். பெரிய முதலீட்டுக்கான திட்டமிடுவீர்கள். தொழில் சம்பந்தமான விஷயங்களில் இருந்த மனக்குழப்பம் தீரும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பிற்பகலுக்கு மேல் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கை தேவை. இன்று குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ரிஷபம்
பணிச்சுமை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையை கடைப்பிடிக்கவும். இன்று யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். இன்று சோம்பலை கைவிட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.
மிதுனம்
கடின உழைப்புகள் செய்ய வேண்டிய நாள். பிள்ளைகளின் செயல்பாடுகள் வீட்டில் கலகலப்பான சூழ்நிலையை ஏற்படும். எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள். பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. சமூகப் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்பீர்கள். சகோதரர்கள் உறவில் விரிசல் நீங்கும். இன்றைய வேலைகளை நாளைக்கு தள்ளி வைக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
வியாபாரத்தில் பிரச்சனைகள் தீர்ந்து முன்னேற்றம் ஏற்படும். வேலைகளில் முழு கவனம் செலுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். மாணவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றும் செயல்கள் மூலம் மற்றவர்களை ஈர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். இழுபறியாக இருந்த முக்கியமான காரியம் ஒன்று அனுகூலமாக முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள்.
சிம்மம்
இன்று ஆபத்தான வேலைகளை தவிர்க்கவும். நெருங்கிய நண்பர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையை மதித்து நடக்கவும். உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். பெரிய லாபத்தை பெறுவதற்காக, தவறான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்.
கன்னி
உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். முக்கியமான வேலைகளை கவனமாக செய்து முடிக்கவும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். இன்று வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
துலாம்
இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் அன்றாட வேலைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டியதிருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் இலக்கை அடைய சிலருடன் சேர்ந்து பயணிப்பீர்கள். இன்று வியாபார ரீதியாக உங்களுக்கு நற்பலன் கிடைக்கக்கூடிய நாள். குடும்ப பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். சட்ட விஷயங்களில் பொறுமையாக கையாளவும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று பொழுதுபோக்காக பயணங்கள் செல்வீர்கள். உற்றார் உறவினர்களுடன் இணக்கமான உறவைக் கொண்டிருப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த திட்டங்களை நிறைவேற்ற முடியும். உங்கள் உடல்நிலையில் அலட்சியம் காட்ட வேண்டாம். உங்கள் உடல் நலன் மற்றும் உணவு பழக்கவழக்கத்தில் கவனம் செலுத்தவும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.
தனுசு
உங்கள் வேலைகளில் தயக்கம் எதுவும் இன்றி செயல்படுவீர்கள். சிக்கல்கள் தீரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நாள். நீண்டநாள்களாக வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். இன்று செலவுகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். குடும்ப விஷயத்தில் பொறுமையாக செயல்படவும்.
மகரம்
நிதி சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று அவசரமாக முடிவு எடுக்க வேண்டாம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசி அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு, சிந்தித்து முடிவு எடுக்கவும். பயணத்தின் மூலம் மனப்பலன்களை பெறுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் அறிவுரை உங்களுக்கு நல்ல பலனை பெற்று தரும்.
மீனம்
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பிரச்சனைகளை உங்களின் அனுபவத்தின் மூலம் தீர்க்க முடியும். தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்து விடுவீர்கள். தோற்ற பொலிவு கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்.