Advertisement
அசைவம்

காரசாரமான சுவையில் டோஃபு இறால் பிரட்டல் இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

நாவூறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும், டோஃபு இறால் பிரட்டல். சிக்கன் மற்றும் மீன் போன்றே இந்த டோஃபு இறால் பிரட்டல் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65 என பல உணவுகளை செய்து கொடுக்கலாம்

இதையும் படியுங்கள் : நாகூர் ஸ்பெஷல் இறால் வாடா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

. டோஃபு இறால் பிரட்டல் சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு டோஃபு இறால் பிரட்டல் சுவையாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

டோஃபு இறால் பிரட்டல் | Tofu Prawn Fry Recipe in Tamil

Print Recipe
நாவூறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும், டோஃபு இறால் பிரட்டல். சிக்கன் மற்றும் மீன் போன்றே இந்த டோஃபு இறால் பிரட்டல் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65 என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். டோஃபு இறால் பிரட்டல் சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு டோஃபு இறால் பிரட்டல் சுவையாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
Advertisement
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Prawn, இறால்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 320

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 400 கிராம் டோஃபு
  • 500 கிராம் இறால்
  • 1 சிவப்பு குடை மிளகாய் நறுக்கியது
  • 8 பல் பூண்டு துருவியது
  • 1 Tbsp வெள்ளை மிளகு தூள்
  • 3 வெங்காய தூள் நறுக்கியது
  • 2 Tbsp சோயா சாஸ்
  • 2 Tbsp எண்ணெய்

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் டோஃபுவை ஒரு அங்குல விரல் கண துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும், பின் பூண்டையும் துருவி கொள்ளவும்.
  • பின் வெங்காயத்தாள் மற்றும் குடைமிளகாயை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் நாம் வைத்திருக்கு இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
  • பின்பு ஒரு நாண்ஸ்டிக் தவாவில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் அதில் டோஃபுவை சேர்த்து லேசாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்பு அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் துருவிய பூண்டை சேர்த்து வதக்கவும். மேலும் அதில் நாம் வைத்திருக்கும் இறாலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இறால் பாதியளவு வெந்ததும் குடை மிளகாய் மற்றும் சேர்த்து சோயா சாஸை ஊற்றி அதில் நாம் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள டோஃபுவை போட்டு மூடி வைத்து வேகவிடவும்.
  • பின் இறால் நன்றாக வெந்த பின்பு அதில் மிளகு தூள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான டோஃபு இறால் பிரட்டல் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 1200Gram | Calories: 320kcal | Carbohydrates: 6g | Protein: 32g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 4mg | Potassium: 636mg | Sugar: 0.5g
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 13 மே 2024!

மேஷம் இன்று பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று வணிகஸ்தர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட…

2 மணி நேரங்கள் ago

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

15 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

15 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

15 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

15 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

18 மணி நேரங்கள் ago