Advertisement
சைவம்

இட்லி தோசைக்கு ஏற்ற ரூசியான தக்காளி குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சுழற்சி சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த சுவையான தக்காளி குழம்பு செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு உகந்த ரூசியான உருளை கிழங்கு குழம்பு செய்வது எப்படி ?
கண்டிப்பாக இந்த குழம்பு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் இட்லி தோசைக்கும் மிகவும் பிடித்த குழம்பாக மாறி போகும். இந்த எவையான தக்காளி குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Advertisement

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

தக்காளி குழம்பு | Tomato Kulambu Recipe in Tamil

Print Recipe
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சுழற்சி சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த சுவையான தக்காளி குழம்பு செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த குழம்பு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் இட்லி தோசைக்கும் மிகவும் பிடித்த குழம்பாக மாறி போகும். இந்த எவையான தக்காளி குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்
Course Breakfast
Cuisine Indian, TAMIL
Keyword Tomato kulambu, தக்காளி குழம்பு
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Advertisement
Servings 4 people
Calories 18

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

குக்கரில் அவிக்க

  • 4 முழு தக்காளி
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 கப் தண்ணீர்

குழம்புக்கு அரைக்க

  • ½ கப் துருவிய தேங்காய்
  • ½ tbsp சீரகம்
  • 6 வர மிளகாய்
  • 2 tbsp பொறி கடலை

குழம்புக்கு

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp உளுந்தம் பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை சிறிது
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • ½ கப் தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • முதலில் குக்கரை எடுத்துக்கொண்டு நான்கு முழு தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் நறுக்கியது. அதனுடன் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வைத்து கொள்ளவும்.
  • அதன் பின் குக்கரை
    Advertisement
    இறக்கிக் கொள்ளவும். தக்காளியின் தோல்களை நீக்கிவிட்டு அதை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு நன்றாக தாளிக்கவும்.
  • பின் கடுகு பொறிந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
  • வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் மஞ்சள் தூள், நாம் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டையும் அதனுடன் அரைக்கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பின்பு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், காரத்திற்கு ஏற்ப வர மிளகாய், பொரிகடலை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மை போல் அரைத்துக் கொள்ளவும். அதன் பின்பு குழம்பு கொதித்ததும் இந்த பேஸ்ட்டையும் குழம்புடன் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். பின்பு குழம்பு நன்றாக கொதித்து வந்ததும் சிறிது கொத்தமல்லியை நறுக்கி தூவி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான தக்காளி குழம்பு தயாராகி விட்டது.ழ

Nutrition

Calories: 18kcal | Carbohydrates: 3.9g | Protein: 0.9g | Fat: 0.2g | Sodium: 5mg | Potassium: 237mg

English Overview: tomato kulambu is one of the most important dishes in south india. tomato kulambu recipe or tomato kulambu seivathu eppadi or tomato kulambu recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

8 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

10 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

12 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

16 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

16 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

17 மணி நேரங்கள் ago