Home சைவம் இட்லி தோசைக்கு உகந்த ரூசியான உருளை கிழங்கு குழம்பு செய்வது எப்படி ?

இட்லி தோசைக்கு உகந்த ரூசியான உருளை கிழங்கு குழம்பு செய்வது எப்படி ?

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த உருளை கிழங்கு குழம்பு செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : சுவையான காளன் குருமா செய்வது எப்படி ?

கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் இட்லி தோசைக்கும் மிகவும் பிடித்த குழம்பாக மாறி போகும். இந்த உருளை கிழங்கு குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க. Youtube Sub

Print
No ratings yet

உருளை கிழங்கு குழம்பு | Potato Kulambu Recipe in Tamil

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த உருளை கிழங்கு குழம்பு செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் இட்லி தோசைக்கும் மிகவும் பிடித்த குழம்பாக மாறி போகும். இந்த உருளை கிழங்கு குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time30 minutes
Total Time40 minutes
Course: Kulambu
Cuisine: Indian, TAMIL
Keyword: Potato Kulambu, உருளை கிழங்கு குழம்பு
Yield: 4 people
Calories: 265kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க

  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1 tbsp சீரகம்
  • ½ tbsp சோம்பு
  • 1 ½ tbsp மிளகாய்த் தூள்
  • ½ tbsp மிளகு

குழம்புக்கு

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 tbsp கடுகு                            
  • கருவேப்பிலை சிறிது
  • 12 சின்ன வெங்காயம் நறுக்கி கொள்ளவும்
  • 3 தக்காளி நறுக்கி கொள்ளவும்
  • 250 KG உருளை கிழங்கு
  • 2 பச்சை மிளகாய்
  • 3 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • ½ tbsp கரம் மசாலா
  • 2 கப் தண்ணீர்

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கிக் கொள்ளுங்கள். பின் தோல்களை நீக்கி நறுக்கிக வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு குழம்பு மசாலா அரைக்க வேண்டும் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், சோம்பு, மிளகாய் தூள், மற்றும் மிளகு போன்ற பொருட்களை போட்டு சிறிய அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியதும் கடுகு, கருவேப்பிலை, போட்டு தாளிக்கவும்
  • பின் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள் வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி மசிந்து வரும் வரை வதக்கி கொள்ளவும். அதன் பின்பு பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வகை கிளரி விட்டு வதக்கவும்.
  • பின் தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பின்பு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள்.பின் குழம்பு கொதித்ததும் நாம் வேகவைத்து வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வேக வையுங்கள்.
  • கடைசியில் குழம்பு கொதித்த உடன் கொத்தமல்லி சிறு சிறிதாக வெட்டி தூவி விட்டு கடாயை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் இட்லி தோசைக்கு ஏற்ற உருளைக்கிழங்கு குழம்பு இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Calories: 265kcal | Carbohydrates: 61g | Protein: 6g | Fiber: 4g | Sugar: 5g

English Overview: potato kulambu is one of the most important dishes in south india. Potato kulambu recipe or potato kulambu seivathu eppadi or potato kulambu recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

-விளம்பரம்-

NO COMMENTS

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here