Advertisement
அசைவம்

நாவில் எச்சி ஊறும் சுவையில் டூனா மீன் மசாலா இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

பலரும்  அசைவத்தில் மீனை விரும்பி சாப்பிடுவார்கள். ஒவ்வொருவர்க்கென்று மீன் சமைக்கப்படும் வைக்கும் முறையில் தனிப்பட்ட விதம் உள்ளது. தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. டூனா மீன் எனப்படுவது சூறை மீன் என்று அழைக்கப்படும்.

சூறை மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. வித்தியாசமான மசாலாக்கள் சேர்த்து இந்த மூலம் சுவையான டூனா மசாலா  ஒரு முறை சுவைத்தால் எப்பொழுதும் நீங்கள் இந்த முறையை பின்பற்றியே சூறை மீன் வைப்பீர்கள்.

Advertisement

என்ன தான் பல வகையான அசைவ குழம்புகள் இருந்தாலும் மீன் குழம்புக்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. அதுபோல் இந்த சமையல் குறிப்பு பதிவில் உள்ள டூனா மீன் மசாலா உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது.  டூனா மசாலா  ஒருவித தனி சுவையில் இருக்கும், சூரை மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ளறுப்புக்களின் பாதுகாப்புக்கு உதவி புரிகிறது. சூரை மீனை உணவாக எடுத்துக்கொள்ளும் போது எந்தவிதமான கொழுப்புக்களும் உடலில் சேராமல் உடல் எடையைக் குறைக்க உதவும். டூனா மீன் மசாலா எப்படி செய்வது என்பதைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

டூனா மீன் மசாலா | Tuna Fish Masala Recipe In Tamil

Print Recipe
அசைவத்தில் மீனை
Advertisement
விரும்பி சாப்பிடுவார்கள்.ஒவ்வொருவர்க்கென்று மீன் சமைக்கப்படும் வைக்கும் முறையில் தனிப்பட்ட விதம் உள்ளது.தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. டூனாமீன் எனப்படுவது சூறை மீன் என்று அழைக்கப்படும். சூறை மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும்உதவுகிறது. வித்தியாசமான மசாலாக்கள் சேர்த்து இந்த மூலம் சுவையான டூனா
Advertisement
மசாலா  ஒரு முறை சுவைத்தால் எப்பொழுதும் நீங்கள் இந்த முறையைபின்பற்றியே சூறை மீன் வைப்பீர்கள்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Tuna Fish Masala
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 329

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ டூனா மீன்
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4 பற்கள் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க

  • எண்ணெய் சிறிது
  • கடுகு சிறிது
  • சீரகம் சிறிது
  • வெந்தயம் சிறிது
  • கறிவேப்பிலை சிறிது

Instructions

  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொடிகளைச் சேர்த்து கலந்து விடவும். பிறகு டூனாவைச் சேர்க்கவும்.
  • அத்துடன் நீளமாகக் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.நன்றாகக் கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • சுவையான டூனா மசாலா ரெடி.

Notes

ரசம் சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சைட் இது.

Nutrition

Serving: 250g | Calories: 329kcal | Carbohydrates: 14g | Protein: 43g | Sodium: 231mg | Potassium: 132mg | Calcium: 13mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

3 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

9 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

12 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

13 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

17 மணி நேரங்கள் ago