Home அசைவம் நாவில் எச்சி ஊறும் சுவையில் டூனா மீன் மசாலா இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி...

நாவில் எச்சி ஊறும் சுவையில் டூனா மீன் மசாலா இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

பலரும்  அசைவத்தில் மீனை விரும்பி சாப்பிடுவார்கள். ஒவ்வொருவர்க்கென்று மீன் சமைக்கப்படும் வைக்கும் முறையில் தனிப்பட்ட விதம் உள்ளது. தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. டூனா மீன் எனப்படுவது சூறை மீன் என்று அழைக்கப்படும்.

-விளம்பரம்-

சூறை மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. வித்தியாசமான மசாலாக்கள் சேர்த்து இந்த மூலம் சுவையான டூனா மசாலா  ஒரு முறை சுவைத்தால் எப்பொழுதும் நீங்கள் இந்த முறையை பின்பற்றியே சூறை மீன் வைப்பீர்கள்.

என்ன தான் பல வகையான அசைவ குழம்புகள் இருந்தாலும் மீன் குழம்புக்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. அதுபோல் இந்த சமையல் குறிப்பு பதிவில் உள்ள டூனா மீன் மசாலா உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது.  டூனா மசாலா  ஒருவித தனி சுவையில் இருக்கும், சூரை மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ளறுப்புக்களின் பாதுகாப்புக்கு உதவி புரிகிறது. சூரை மீனை உணவாக எடுத்துக்கொள்ளும் போது எந்தவிதமான கொழுப்புக்களும் உடலில் சேராமல் உடல் எடையைக் குறைக்க உதவும். டூனா மீன் மசாலா எப்படி செய்வது என்பதைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

Print
3 from 3 votes

டூனா மீன் மசாலா | Tuna Fish Masala Recipe In Tamil

அசைவத்தில் மீனை விரும்பி சாப்பிடுவார்கள்.ஒவ்வொருவர்க்கென்று மீன் சமைக்கப்படும் வைக்கும் முறையில் தனிப்பட்ட விதம் உள்ளது.தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. டூனாமீன் எனப்படுவது சூறை மீன் என்று அழைக்கப்படும். சூறை மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும்உதவுகிறது. வித்தியாசமான மசாலாக்கள் சேர்த்து இந்த மூலம் சுவையான டூனா மசாலா  ஒரு முறை சுவைத்தால் எப்பொழுதும் நீங்கள் இந்த முறையைபின்பற்றியே சூறை மீன் வைப்பீர்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Tuna Fish Masala
Yield: 4
Calories: 329kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ டூனா மீன்
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4 பற்கள் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க

  • எண்ணெய் சிறிது
  • கடுகு சிறிது
  • சீரகம் சிறிது
  • வெந்தயம் சிறிது
  • கறிவேப்பிலை சிறிது

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொடிகளைச் சேர்த்து கலந்து விடவும். பிறகு டூனாவைச் சேர்க்கவும்.
  • அத்துடன் நீளமாகக் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.நன்றாகக் கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • சுவையான டூனா மசாலா ரெடி.

செய்முறை குறிப்புகள்

ரசம் சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சைட் இது.

Nutrition

Serving: 250g | Calories: 329kcal | Carbohydrates: 14g | Protein: 43g | Sodium: 231mg | Potassium: 132mg | Calcium: 13mg