ஆரோக்கியம் காக்கும் ஊட்டச் சத்து நிறைந்த ருசியான சுண்டைக்காய் சாம்பார் இப்படி ஒரு முறை செய்து பாருங்க வீடே மணக்கும்!
நாம் அனைத்து காய்கறிகளிலும் பலவிதமாக சாம்பார் வைத்திருப்போம். எல்லா காய்கறிகளையும் சேர்த்து கதம்ப சாம்பார் கூட செய்திருப்போம். இன்று நாம் செய்யவிருக்கும் சாம்பார் சுண்டைக்காய் சாம்பார். சுண்டை காயில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது . இந்த சுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொ
நாம் அனைத்து காய்கறிகளிலும் பலவிதமாக சாம்பார் வைத்திருப்போம். எல்லா காய்கறிகளையும் சேர்த்து கதம்ப சாம்பார் கூட செய்திருப்போம். இன்று நாம் செய்யவிருக்கும் சாம்பார் சுண்டைக்காய் சாம்பார். சுண்டை காயில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது . இந்த சுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்துமே கிடைக்கின்றன. மேலும் குழந்தைகளுக்கு வயிற்றில் இருக்கும் பூச்சிகள் , குடல் புழுக்கள் ஆகியவற்றை வெளியேற்றுவதற்கு இந்த சுண்டைக்காய் மிகவும் பயன்படுகின்றது.
ஆகையால் இந்த சுண்டைக்காயை வாரத்தில் ஒருமுறையாவது அல்லது கிடைக்கும் பொழுதெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இந்த சுண்டைக்காயில் துவையல் அரைத்து சாப்பிட்டாலும் அதில் உள்ள பலன்கள் நமக்கு அப்படியே கிடைக்கும். சுண்டைக்காய் சத்து மிக்க காய் மட்டும் கிடையாது சுவையான ஒரு காயும் கூட. இந்த சுவை மிக்க சுண்டைக்காய் உணவில் நாம் சேர்த்துக் கொள்ளும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுண்டைக்காயில் லேசான கசப்பு தன்மை இருக்கும் ஆனால் சாப்பிடுவதற்கு அவ்வளவு ஒன்றும் மோசமானதாக இருக்காது. மிகவும் சுவை மிக்க இந்த சுண்டைக்காய் ஆரோக்கியமிக்கதாகவும் இருப்பதால் அதிலும் இரும்பு சத்து அதிகம் இருக்கக்கூடிய இந்த சுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடலுக்கு மேலும் பல ஆரோக்கியமான நன்மைகளை கொடுக்கும். உடலுக்கு நன்மை தரக்கூடிய காய்கறிகளை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் காரணம் அதன் சுவை அவர்களுக்கு பிடிக்காத ஆகையால் இதுபோல சாம்பார் அல்லது குழம்பு ஏதாவது ஒன்றில் சேர்த்துக் கொடுக்கும் பொழுது அந்த காய்கறியில் உள்ள சத்துக்கள் முழுவதும் குழம்பின் சாறில் இறக்கி விடுவதால் அவர்கள் உண்ணும் பொழுது உடலுக்கு சென்று சேர்கிறது. ஆகையால் சுண்டைக்காயை ஒருதரம் இதுபோன்று சாம்பார் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இது அனைவரும் உண்ணுவதற்கு ஏற்ற ஒரு காயாகும். சரி வாருங்கள் எப்படி இந்த சுண்டைக்காய் சாம்பார் வைப்பது எப்படி தெரிந்து கொள்ளலாம்.