நாம் அனைத்து காய்கறிகளிலும் பலவிதமாக சாம்பார் வைத்திருப்போம். எல்லா காய்கறிகளையும் சேர்த்து கதம்ப சாம்பார் கூட செய்திருப்போம். இன்று நாம் செய்யவிருக்கும் சாம்பார் சுண்டைக்காய் சாம்பார். சுண்டை காயில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது . இந்த சுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்துமே கிடைக்கின்றன. மேலும் குழந்தைகளுக்கு வயிற்றில் இருக்கும் பூச்சிகள் , குடல் புழுக்கள் ஆகியவற்றை வெளியேற்றுவதற்கு இந்த சுண்டைக்காய் மிகவும் பயன்படுகின்றது.
ஆகையால் இந்த சுண்டைக்காயை வாரத்தில் ஒருமுறையாவது அல்லது கிடைக்கும் பொழுதெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இந்த சுண்டைக்காயில் துவையல் அரைத்து சாப்பிட்டாலும் அதில் உள்ள பலன்கள் நமக்கு அப்படியே கிடைக்கும். சுண்டைக்காய் சத்து மிக்க காய் மட்டும் கிடையாது சுவையான ஒரு காயும் கூட. இந்த சுவை மிக்க சுண்டைக்காய் உணவில் நாம் சேர்த்துக் கொள்ளும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுண்டைக்காயில் லேசான கசப்பு தன்மை இருக்கும் ஆனால் சாப்பிடுவதற்கு அவ்வளவு ஒன்றும் மோசமானதாக இருக்காது. மிகவும் சுவை மிக்க இந்த சுண்டைக்காய் ஆரோக்கியமிக்கதாகவும் இருப்பதால் அதிலும் இரும்பு சத்து அதிகம் இருக்கக்கூடிய இந்த சுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடலுக்கு மேலும் பல ஆரோக்கியமான நன்மைகளை கொடுக்கும். உடலுக்கு நன்மை தரக்கூடிய காய்கறிகளை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் காரணம் அதன் சுவை அவர்களுக்கு பிடிக்காத ஆகையால் இதுபோல சாம்பார் அல்லது குழம்பு ஏதாவது ஒன்றில் சேர்த்துக் கொடுக்கும் பொழுது அந்த காய்கறியில் உள்ள சத்துக்கள் முழுவதும் குழம்பின் சாறில் இறக்கி விடுவதால் அவர்கள் உண்ணும் பொழுது உடலுக்கு சென்று சேர்கிறது. ஆகையால் சுண்டைக்காயை ஒருதரம் இதுபோன்று சாம்பார் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இது அனைவரும் உண்ணுவதற்கு ஏற்ற ஒரு காயாகும். சரி வாருங்கள் எப்படி இந்த சுண்டைக்காய் சாம்பார் வைப்பது எப்படி தெரிந்து கொள்ளலாம்.
சுண்டைக்காய் சாம்பார் | Turkey Berry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 100 கிராம் துவரம் பருப்பு
- 1 கப் சுண்டைக்காய்
- 1 தக்காளி
- 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 ஸ்பூன் மல்லி தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 10 சின்ன வெங்காயம்
- 1/4 மூடி தேங்காய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் சுண்டைக்காயை சுத்தம் செய்து நசுக்கி அல்லது கீறி எடுத்து கொள்ள வேண்டும். தேங்காயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
- பின் குக்கரில் பருப்பு, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டைக்காய் சேர்த்து மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- சுண்டைக்காய்வெந்த பிறகு தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- சாம்பார் கொத்தித்த உடன் இறக்கி சாதத்தோடு சூடாக பரிமாறினால் சுவையான சுண்டைக்காய் சாம்பார் தயார்.