உங்கள் கழுத்தை இருக்கி பிடிக்கும் அளவு கடன் பிரச்சினை இருந்தாலும் கடன் தீர கல் உப்பு இருந்தால் போதும்!

தங்கள் வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும். தங்களுக்கு தேவையான செலவுகளை மட்டும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும். அவர்கள் எப்போது வீட்டிற்கு வந்து என்ன சொல்லித் திட

By Prem Kumar · 12/11/2023

தங்கள் வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும். தங்களுக்கு தேவையான செலவுகளை மட்டும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும். அவர்கள் எப்போது வீட்டிற்கு வந்து என்ன சொல்லித் திட்டி கடனை திருப்பி கேட்பார்கள் என்று மனது எப்பொழுதும் கவலையுடனும், படபடப்புடனுமே இருக்கும். கடன் இல்லாத வாழ்வை யார் வாழ்கிறாரோ அவர்தான் பெரிய மனிதன் ஆகிறார். இவ்வுலகில் கடன் இல்லாத ஒருவரை கூட நம்மளால் பார்க்க முடியாது அந்த அளவுக்கு கடன் நம் வாழ்க்கையில் விளையாடி கொண்டு இருக்கிறது.

பொதுவாக பலருக்கு தீராத கடன் பிரச்சனை இருக்கும். மாதம் மாதம் சம்பாதிக்கும் பணத்தில் பாதி கடனுக்கே செலவிடுகிறோம். சில பேருக்கெல்லாம் நிறையவே வருமானம் வரும். ஆனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாது. லட்ச லட்சமாக சம்பாதித்தும் கடன்காரர்களாக வாழ்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கடன் பிரச்சினையை தீர்க்க உதவும் கல் உப்பு

நாம் அனைவரும் கல் உப்பை சமையலில் பயன்படுத்தி இருப்போம். ஆனால் கல் உப்பு ஆன்மீகத்திலும் மிகப் பெரிய சக்தி கொண்டது. கல்லுப்புக்கும், கடனுக்கும், மகாலட்சுமிக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் நமக்கு உறுதுணையாக இருக்கக் கூடியவர் தான் மகாலட்சுமி தாயார். கல்லுப்பு முழுக்க முழுக்க மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. கடன் தொல்லை நீங்க கல்லுப்பு பரிகாரம் மிகசிறந்த ஒன்றாகும். கஷ்டங்களை கொடுக்கும் கடனை கூட மிக எளிதாக கரிக்கக்கூடிய ஆற்றல் கல் உப்பிற்கு உள்ளது.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு வெற்றிலை, கொட்டைப்பாக்கு, உப்பு மற்றும் ஒரு மஞ்சள் நிற துணி தேவை. காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு, பின் வெற்றிலையை நன்கு கழுவி விட்டு அதன்மேல் சிறிதளவு கல் உப்பை வையுங்கள். அதன்பிறகு கல் உப்பின் மேல் கொட்டைப்பாக்கை வைத்து மஞ்சள் துணியால் ஒரு‌ முடிச்சாக கட்டி பூஜையறையில் இருக்கும் லட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன்னால் வைத்து விடுங்கள்.

பின்னர் வீட்டில் விளக்கு ஏற்றி, சாமி படங்கள் மற்றும் இந்த மூட்டைக்கு பூ வைத்து தீபாராதனை காட்டி உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ஒரு நாள் முழுவதும் இந்த மூட்டை பூஜையறையிலேயே இருக்கட்டும். அடுத்த நாள் காலையில் மற்றொரு வெற்றிலை வாங்கி இதே மாதிரி செய்து பூஜையறையில் வைத்து விடுங்கள். ஏற்கனவே இருந்த மூட்டையை எடுத்து ‌அதனுள் இருக்கும் உப்பினை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.‌ வெற்றிலையை உங்கள் வீட்டில் இருக்கும் யாராவது சாப்பிட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை எந்த நாள் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர வேண்டும்.

இந்த கல் உப்பு பரிகாரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு முறை தான். இந்த கல் உப்பு வைத்து நினைத்ததை நடத்தியம், பிரச்சனைகளையும் சரி செய்துள்ளார்கள். அதனால் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் விடுபட்டுக் கொள்ளுங்கள்.

இதனையும் படியுங்கள் : உங்கள் எதிரிகள் என்ன செய்தாலும் அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமா ? சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரம்!!

Recipes AMP · Quick view
View full