கிராமத்து ஸ்டைல் வாழைத்தண்டு சாம்பார் மணக்க மணக்க இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க!
இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான். நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விட
இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான். நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விடவும் முடியும். அப்படியான ஒரு வாழைத்தண்டு சாம்பார் ரெசிபி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை. இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சையளிக்க உதவும். வாழைப்பழங்கள் போன்று வாழைத்தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது.
இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இது தசைகள் சேதமில்லாமல் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. வாழை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களுமே நம் உடலுக்கு மிகவும் நல்லது. வாழைக்காய் வாழைப்பழம் வாழைத்தண்டு வாழை இலை என அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது. வாழைத்தண்டில் பொரியல், அடை, ஜீஸ், சூப், ஊறுகாய், கூட்டு என எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதை தயிருடன் சேர்த்து வாழைத்தண்டு மோர் கூட்டு செய்யலாம். பெரும்பாலானவர்கள் இருக்கும் சிறுநீரக கல் பிரச்சனைக்கு வாழைத்தண்டு ஒரு அருமருந்து. ஆனால் வாழைதண்டை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.
இது போல சாம்பார் செய்து கொடுத்தால் அனைவரையுமே விரும்பி சாப்பிடுவார்கள். இதில் காரம் குறைவாக இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கும். எனவே இதை செய்து மகிழுங்கள். இந்த வாழைத்தண்டு சாம்பார் சமைப்பது மிகவும் சுலபம். அதிலும் கிராமத்து முறையில் இந்த வாழைத்தண்டை சாம்பார் வைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் அதே சமயத்தில் ருசியும் மிகவும் அட்டகாசமாக இருக்கும். இந்த தொகுப்பில் வாழைத்தண்டு சாம்பார் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இனி வாழைதண்டு வாங்கினால் ருசியான வாழைதண்டு கூட்டு இப்படி செஞ்சி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!