இனி வாழைதண்டு வாங்கினால் ருசியான வாழைதண்டு கூட்டு இப்படி செஞ்சி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

- Advertisement -

வாழை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களுமே நம் உடலுக்கு மிகவும் நல்லது. வாழைக்காய் வாழைப்பழம் வாழைத்தண்டு வாழை இலை என அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது. அன்றாட வாழ்வில் நாம் வாழைப்பழம் சாப்பிடுவோம்.வாழைத்தண்டு கூட்டுவாழை காயையும் நாம் அடிக்கடி பொரியல் ரோஸ்ட் என செய்து சாப்பிடுவோம். ஆனால் வாழைத்தண்டை ஒரு சிலர் மட்டுமே அதிகமாக சமைத்து உண்பார்கள் ஆனால் அனைவருமே இந்த வாழைத்தண்டை அவர்களது வாழ்வில் உணவில் எடுத்துக் கொண்டால் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

-விளம்பரம்-

பொதுவாக இப்பொழுது பலருக்கு சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த வாழைத்தண்டை நீங்கள் உங்கள் வாழ்வில் அடிக்கடி எடுத்துக் கொண்டால் சிறுநீரகம் சம்பந்தமான எல்லா பிரச்சனைகளும் சீக்கிரத்தில் சரியாகிவிடும். இந்த வாழைத்தண்டை சமைப்பது மிகவும் சுலபம். அதிலும் கிராமத்து முறையில் இந்த வாழைத்தண்டை சமைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் அதே சமயத்தில் ருசியும் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -

சிறுநீரக பிரச்சனை மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இந்த வாழைத்தண்டை கிராமத்து முறையில் எப்படி சமைப்பது என்று பார்க்கப் போகிறோம். இந்த பாய் தண்டைய வைத்து நாம் நிறைய ரெசிப்பிஸ் செய்யலாம். ஆனால் இப்பொழுது நாம் வாழை தண்டு கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். வாங்க இந்த அருமையான வாழைத்தண்டு கூட்டு கிராமத்து முறையில எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

வாழைத்தண்டு கூட்டு | Banana Stem Kootu Recipe In Tamil

பொதுவாக இப்பொழுது பலருக்கு சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த வாழைத்தண்டை நீங்கள் உங்கள் வாழ்வில் அடிக்கடி எடுத்துக் கொண்டால் சிறுநீரகம் சம்பந்தமான எல்லா பிரச்சனைகளும் சீக்கிரத்தில் சரியாகிவிடும். இந்த வாழைத்தண்டை சமைப்பது மிகவும் சுலபம். அதிலும் கிராமத்து முறையில் இந்த வாழைத்தண்டை சமைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் அதே சமயத்தில் ருசியும் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Banana Stem Kootu
Yield: 4
Calories: 138kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 துண்டு வாழைத்தண்டு
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 8 சின்ன வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 கப் பச்சை வேர்கடலை
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் பால்
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் வாழைத்தண்டிலிருந்நு  நாரை எடுத்து சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பையும் நன்றாக வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • பச்சை வேர்கடலையையும் நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
  • ஒரு அதிக கனமான பாத்திரம் அல்லது மண் சட்டியில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு வேக வைத்துள்ள வாழைத்தண்டு வேக வைத்துள்ள வேர்க்கடலை அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.
  •  
    ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சீரகம் கருவேப்பிலை அனைத்தும் சேர்த்து தாளித்து அந்த வாழைத்தண்டு கலவையில் சேர்த்து விட வேண்டும்.
  • இறுதியாக பால் சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் கொதித்து பிறகு இறக்கினால் சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்

Nutrition

Serving: 100g | Calories: 138kcal | Carbohydrates: 42g | Protein: 13g | Fat: 1g | Potassium: 381mg | Fiber: 2g

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் வாழைக்காய் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! குறைந்த நேரத்தில் பக்காவான கிரேவி ரெடி!