தீர்க்க சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இல்லத்தரசிகள் பெரும்பாலும் விரதம் இருப்பது குடும்ப நன்மைக்காகவும், கணவனின் ஆயுள் ஆரோக்கியத்திற்காகவும் தான். வட சாவித்திரி விரதம் கணவனின் ஆயுள் பலம் வேண்டியும் தீர்க்க சுமங்கலி வரம் கேட்டும் கடைபிடிக்கப்படும் விரதமாகும். இந்த விரதம் வட இந்தியாவில் வைகாசி மாத அமாவாசை தினத்திலும் த

By Prem Kumar · 11/6/2024

இல்லத்தரசிகள் பெரும்பாலும் விரதம் இருப்பது குடும்ப நன்மைக்காகவும், கணவனின் ஆயுள் ஆரோக்கியத்திற்காகவும் தான். வட சாவித்திரி விரதம் கணவனின் ஆயுள் பலம் வேண்டியும் தீர்க்க சுமங்கலி வரம் கேட்டும் கடைபிடிக்கப்படும் விரதமாகும். இந்த விரதம் வட இந்தியாவில் வைகாசி மாத அமாவாசை தினத்திலும் தென் இந்தியாவில் வைகாசி மாத பவுர்ணமி தினத்திலும் கடைபிடிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும். காரடையான் நோன்பு தவிர வைகாசி மாத அமாவாசையிலும் கொண்டாடப்படும் வட சாவித்திரி விரதமும் மிக முக்கியமானதாகும். இது ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று கடைபிடிக்கப்படுகிறது. அதனால் இதை வட சாவித்திரி அமாவாசை என்றும் அழைப்பதுண்டு. இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

வட சாவித்திரி விரதம்

வட சாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில் தான் இருக்கிறது. அதுப்போல ஒரு பெண்ணின் பலம் அவளின் கணவனை பொருத்துதான் இருக்கிறது. இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.

புராணக்கதை

சாவித்திரியின் கதை இந்து இதிகாசமான மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாவித்திரி சத்தியவான் என்னும் அரசனை தன் வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்தாள். ஒரு நாள் மரம் வெட்டுவதற்காக இருவரும் காட்டிற்குச் சென்றனர். ஆனால் சத்தியவான் அங்கு இருக்கும் ஆலமரத்தடியில் மயங்கி விழுந்து இறந்தார். சத்தியவானின் ஆன்மாவைப் பறிக்க மரணத்தின் கடவுளான யமன் தோன்றினான். இதைப் பார்த்த சாவித்திரி, அவர்களைப் பின் தொடர்ந்தாள். சாவித்திரியின் பக்தியால் மனம் நெகிழ்ந்த யமன், அவள் கணவனின் உயிரைத் திரும்ப கொடுத்துவிட்டார். சத்தியவானும் தனது இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்றார். சாவித்ரியின் நற்பண்பு, தன் கணவரிடம் உள்ள விசுவாசம் மற்றும் பக்தி அவரை இந்துப் பெண்களுக்கு முன்மாதிரியாக ஆக்கியுள்ளது. அதனால் சாவித்திரியின் நினைவாக இந்த வட சாவித்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

விரதம் கடைபிடிக்கும் முறை

விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜை அறையில் கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். பின் ஆலமரம் உள்ள கோவிலுக்குச் சென்று தண்ணீர் மற்றும் பாலை மரத்தின் வேர்களில் ஊற்றி, சாவித்திரி, யம தர்ம ராஜா மற்றும் கெளரி மாதாவை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பின் அரச மரத்திற்கு பருத்தி நூல் கொண்டு ஏழு அல்லது 11 முறை சுற்றி வந்து ரட்சை கட்ட வேண்டும். ஜூன் 06ம் தேதியன்று காலை 11.36 மணி முதல் பகல் 12.14 வரையிலான நேரத்தை அபிஜித் முகூர்த்த நேரமாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் இந்த நேரத்தில் அரச மர வழிபாடு மற்றும் வட சாவித்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த முறையில் வழிபாடு செய்தால் கணவரின் நீண்ட ஆயுளுடன் வீட்டில் செல்வ வளம் பெருகும். தீர்க்க சுமங்கலி வரமும் கிடைக்கும்.

வட சாவித்திரி விரதம் கடைபிடிப்பதன் பலன்கள்

பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளும் விரதம் இது. ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருக்கும் பெண்கள் இந்த வட சாவித்திரி விரதத்தை கடைபிடிக்கலாம். இதன் மூலம் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதால், விரைவில் கல்யாண வரம் கைகூடும், மனதுக்கினிய கணவர் வாய்ப்பார்.

இதனையும் படியுங்கள் : விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Recipes AMP · Quick view
View full