Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற வாழைக்காய் வறுவல் இனி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

வாழைக்காய் வறுவல் சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அசைவ பிரியர்களுக்கும் வாழைக்காய் மீன் போன்று வறுத்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில் இது போன்று ஒரு முறை வாழைக்காய் வறுவல் செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. இந்த வாழைக்காய்

இதையும் படியுங்கள் : சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Advertisement

வறுவல் செய்து எல்லா வகை சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மதிய உணவோடு இந்த வறுவலையும் செஞ்சி கொடுங்கள், விரும்பி சாப்பிடுவாங்க. இந்த வாழைக்காய் வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

வாழைக்காய் வறுவல் | Valaikai Fry Recipe In Tamil

Print Recipe
வாழைக்காய் வறுவல் சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அசைவ பிரியர்களுக்கும் வாழைக்காய் மீன் போன்று வறுத்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில் இது போன்று ஒரு முறை வாழைக்காய் வறுவல் செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. இந்த வாழைக்காய் வறுவல் செய்து எல்லா வகை சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மதிய உணவோடு இந்த வறுவலையும் செஞ்சி கொடுங்கள், விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword valaikai fry, வாழைக்காய் வறுவல்
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people
Calories 81

Equipment

  • 1 கடாய்
  • மிக்ஸி

Ingredients

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 3 வாழைக்காய் நறுக்கியது
  • 1 டீஸ்பூன் கடுகு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா

அரைப்பதற்கு:

  • ½ கப் தேங்காய் துருவல்
  • டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ¾ டீஸ்பூன் சோம்பு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • 10 மிளகு
  • ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 சின்ன வெங்காயம்
  • ½ பழம் தக்காளி நறுக்கியது

Instructions

  • முதலில் வாழைக்காயை தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும் பிறகு அதனை கருக்காமல் இருக்க தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • பிறகு ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி எண்ணெய் மூடி போட்டு வேகவிடவும்.
  • வேகும் சமையத்தில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்தும் அந்த மசாலாவை வேக வைத்திருக்கும் வாழைக்காவில் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கலந்து 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
  • வெந்ததும் அதன் மேல் கரம் மசாலா மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.

Nutrition

Serving: 510G | Calories: 81kcal | Carbohydrates: 2g | Protein: 8g | Saturated Fat: 0.5g | Cholesterol: 0.1mg | Potassium: 481mg | Sugar: 0.2g | Vitamin A: 6IU | Iron: 0.3mg
Advertisement
swetha

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

6 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

7 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

9 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

13 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

13 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

14 மணி நேரங்கள் ago