- Advertisement -
சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்
அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான ஒரு வகை சைவ உணவு தான் சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன். மஞ்சூரியன் என்றால் காலிபிளவரில் செய்றது தான் என்று அனைவரும் நினைப்பர் ஆனால் இதை உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவு தான்.
-விளம்பரம்-
காய்கறிகளில் எதை சாப்பிடவில்லை என்றாலும் இந்த உருளைக்கிழங்கை எல்லா குழந்தைகளுமே விரும்பி சாப்பிடுவார்கள். பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் இந்த உணவு வகையை மிக சுலபமாக வீட்டிலேயே மொறு மொறுவென்று எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் காண்போம் வாருங்கள்.
- Advertisement -
சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் | Schezwan Potato Manchruian Recipe in Tamil
அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான ஒரு வகை சைவ உணவு தான் சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன். மஞ்சூரியன் என்றால் காலிபிளவரில் செய்றது தான் என்று அனைவரும் நினைப்பர் ஆனால் இதை உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவு தான். காய்கறிகளில் எதை சாப்பிடவில்லை என்றாலும் இந்த உருளைக்கிழங்கை எல்லா குழந்தைகளுமே விரும்பி சாப்பிடுவார்கள். பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் இந்த உணவு வகையை மிக சுலபமாக வீட்டிலேயே மொறு மொறுவென்று எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் காண்போம் வாருங்கள்.
Yield: 4 People
Calories: 90.93kcal
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 2 உருளைக்கிழங்கு
- 1 tsp சோள மாவு
- 1 tsp மிளகுத்தூள்
- உப்பு தேவையான அளவு
- 1 tsp எண்ணெய்
மஞ்சூரியன் செய்வதற்கு
- 3 tsp எண்ணெய்
- 1 tsp பூண்டு பொடியாக நறுக்கியது
- 1/2 tsp பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- 2 tsp பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1/4 கப் குடைமிளகாய் பொடியாக நறுக்கியது
- 1/4 tsp சோயா சாஸ்
- 1 tsp தக்காளி சாஸ்
- 1 tsp சிசுவான் சாஸ்
- 1/2 tsp சோள மாவு 2 tsp நீருடன் கலந்து கொள்ளவும்
- உப்பு தேவையான அளவு
- ஸ்பிரிங் ஆனியன் – சிறிது பொடியாக நறுக்கியது
செய்முறை
- முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, தோலுரித்து, நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் உருளைக்கிழங்கு, சோள மாவு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை போட்டு, பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
- பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் சிறிது தண்ணீர் மற்றும் சோள மாவு கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கிளறி விட வேண்டும்.
- அடுத்து அதில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி, மேலே ஸ்பிரிங் ஆனியன் தூவி கிளறி இறக்கினால், சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ரெடி!!
Nutrition
Serving: 500g | Calories: 90.93kcal | Protein: 29g | Fat: 0.96g
இதையும் படியுங்கள் : மொறு மொறுவென உருளைக்கிழங்கு மெதுவடை செய்வதுை எப்படி ?