காரசாரமான ருசியில் வாழைக்காய் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! குறைந்த நேரத்தில் பக்காவான கிரேவி ரெடி!
முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. வாழைக்காய் நம் உடல் நலத்திற்கு அவசியமான ஒரு காய்கறி ஆகும். இதில் நார்ச்சத்து
முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. வாழைக்காய் நம் உடல் நலத்திற்கு அவசியமான ஒரு காய்கறி ஆகும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை அகற்றுகிறது. எனவே மலச்சிக்கலுக்கு வாழைக்காய் உணவு அருமையான தீர்வு. காய்கறிகளிலே வாழைக்காய் என்றாலே சிலருக்கு அலர்ஜி தான். குழந்தைகள் கூட உருளைக்கிழங்கு, கருணை கிழங்கு சாப்பிடும் அளவிற்கு வாழைக்காயை சாப்பிடுவதில்லை.
இந்த வாழைக்காய் இப்படி மட்டும் செய்தால் போதும் வாழைக்காய் பிடிக்காது என்பவர்கள் கேட்டு வாங்கி சாப்பிடுவது. வாழைக்காய் ஒத்துக் கொள்ளாது என்பவர்களுக்கும் கூட ஒண்ணும் பிரச்சனை இருக்காது தைரியமாக சாப்பிடலாம். அந்த வகையில் வாழைக்காயை வறுவலாகவும், குழம்பாகவும் நம்முடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காயில் அதிகபட்சமாக பலரும் பொரியல்தான் செய்ய யோசிப்பார்கள். ஆனால் அதில் அட்டகாசமான சுவையில் கிரேவியும் செய்யலாம் தெரியுமா..? இன்னைக்கே இதை செஞ்சு பாருங்க. உங்க வீடே மணக்கும். அப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க. இந்த கிரேவியை சட்டுனு 10 லிருந்து 15 நிமிடத்தில் செய்துவிடலாம். சுவைக்கு எந்த குறையும் இருக்காது. சுடச்சுட சாதத்தில் கொஞ்சம் இந்த கிரேவியை போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். தொட்டுக்கொள்ள அப்பளம் இருந்தால் போதும். ஒரு குன்டான் சாப்பாடு உள்ளே இறங்கி விடும்.
இதனையும் படியுங்கள் : வாழைக்காய் வீட்டில் இருந்தால் இன்னைக்கு இந்த வாழைக்காய் புளி வறுவல் ரெசிபியை ட்ரை பண்ணி பாக்குறீங்க! அசத்தலான ருசியில் இருக்கும்!