Home சைவம் வாழைக்காய் வீட்டில் இருந்தால் இன்னைக்கு இந்த வாழைக்காய் புளி வறுவல் ரெசிபியை ட்ரை பண்ணி பாக்குறீங்க!...

வாழைக்காய் வீட்டில் இருந்தால் இன்னைக்கு இந்த வாழைக்காய் புளி வறுவல் ரெசிபியை ட்ரை பண்ணி பாக்குறீங்க! அசத்தலான ருசியில் இருக்கும்!

வீட்டில் வாழைக்காய் இருந்தால் தவறாமல் இந்த வறுவல் முயற்சி செய்து பாருங்கள். இந்த மழைக்காலத்திற்கு சுடச்சுட ரசம், சாதத்திற்கு தொட்டு சாப்பிட அத்தனை அருமையாக இருக்கும். மிக மிக சுலபமாக அசைவ வாசத்தோடு, ஒரு சைவ வறுவல். அசைவம் சாப்பிட முடியாத சமயத்தில் வீட்டில் இருக்கும் அசைவ பிரியர்களுக்கு உங்கள் கையால் இந்த வறுவலை செய்து கொடுத்தால், நிச்சயம் பாராட்டு மழை தான்.

-விளம்பரம்-

பெரும்பாலும் வாழைக்காய் செய்வதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியது இல்லை என்பதால் அடிக்கடி செய்வது உண்டு. ஆனால் இதை அடிக்கடி சாப்பிடுவதால் வாய்வு ஏற்படும் என்கிற காரணத்தினால் சிலர் தவிர்ப்பதும் உண்டு. ஒரே மாதிரியாக வாழைக்காய் பொரியல் அல்லது வறுவல் செய்து சாப்பிட்ட நீங்கள் புதுமையான முறையில் இப்படி வாழைக்காய் புளி வறுவல் ஒரு முறை செய்து பாருங்கள்! வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியம் மிகுந்த இந்த வாழைக்காய் புளி வறுவல்  செய்ய சில நிமிடம் போதும், சட்டென செய்து விடலாம். சரி, அதை எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Print
5 from 1 vote

வாழைக்காய் புளி வறுவல் | Raw Banana Puli Fry In Tamil

பெரும்பாலும் வாழைக்காய் செய்வதற்கு அதிகம்சிரமப்பட வேண்டியது இல்லை என்பதால் அடிக்கடி செய்வது உண்டு. ஆனால் இதை அடிக்கடி சாப்பிடுவதால்வாய்வு ஏற்படும் என்கிற காரணத்தினால் சிலர் தவிர்ப்பதும் உண்டு. ஒரே மாதிரியாக வாழைக்காய்பொரியல் அல்லது வறுவல் செய்து சாப்பிட்ட நீங்கள் புதுமையான முறையில் இப்படி வாழைக்காய்புளி வறுவல் ஒரு முறை செய்து பாருங்கள்! வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியம் மிகுந்த இந்த வாழைக்காய் புளி வறுவல்  செய்ய சில நிமிடம்போதும், சட்டென செய்து விடலாம். சரி, அதை எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம், வாருங்கள்பதிவிற்குள் போகலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Raw Banana Tamarind Fry
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 2 வாழைக்காய்
  • சிறிய புளி நெல்லிக்காய் அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை

  • வாழைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியுடன் தண்ணீர் ஊற்றி கரைத்து அரை கப் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காயை போட்டு மஞ்சள் தூள் மற்றும் புளி கரைசலை ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.
  • வாணலியில் ஒரு டேபிள் ஸ்பு+ன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வேக வைத்த வாழைக்காயை போட்டு அதிகமான தீயில் வைத்து பிரட்டவும்.
  • 5 நிமிடம் கழித்து தீயை குறைத்து வைத்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 4 நிமிடம் பிரட்டி விடவும்.
  • வாழைக்காய் நன்கு ரோஸ்ட்டாக மாறும் வரை வைத்திருந்து பின்னர் இறக்கவும்,
  • சுவையான வாழைக்காய் புளி வறுவல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 3g | Sodium: 213mg | Potassium: 23.2mg | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : காரசாரமான வாழைக்காய் கார குழம்பை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! சாதத்துக்கு பக்காவாக இருக்கும்!