வளர்பிறை சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்!
கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவது கடன் பிரச்சினையிலிருந்து அவர்களை காக்கும். வார வாரம் செவ்வாய்க்கிழமை என்று செவ்வாய் பகவானுக்கு வழிபாடு செய்து வந்தால் மிகவும் நல்லது. செவ்வாய் பகவானுக்கு அங்காரகன் என்ற ஒரு பெயர் உள்ளது அதற்கு காரணம் விநாயக
கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவது கடன் பிரச்சினையிலிருந்து அவர்களை காக்கும். வார வாரம் செவ்வாய்க்கிழமை என்று செவ்வாய் பகவானுக்கு வழிபாடு செய்து வந்தால் மிகவும் நல்லது. செவ்வாய் பகவானுக்கு அங்காரகன் என்ற ஒரு பெயர் உள்ளது அதற்கு காரணம் விநாயகர் தான் என்று கூறப்படுகிறது. விநாயகப் பெருமானை செவ்வாய் பகவான் சதுர்த்தி திதியில் வழிபட்டதால் அவருக்கு அங்காரகன் என்ற பெயர் வந்தது எனவே அப்படிப்பட்ட சதுர்த்தி திதியில் நாம் விநாயகப் பெருமானை வழிபடுவது மிகவும் நல்லது மேலும் செவ்வாய் பகவானுக்கு உரிய எண்ணானது ஒன்பது என்பதால் பல மடங்கு சிறப்பை தரக்கூடியதாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பான சதுர்த்தி தினத்தில் ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யலாம்
சதுர்த்தி திதி பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு நெய் வசம்பு போன்றவை தேவைப்படும். வசம்பு படத்தை ஈர்த்து தரக்கூடிய ஒன்று எந்த பரிகாரமும் செய்யாமல் வீட்டில் நாம் வசம்பு வாங்கி வைத்தாலே நம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும் அப்படிப்பட்ட வசம்பை வைத்து ஒரு சிறிய பரிகாரத்தை செய்தால் பணவரவிற்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும். வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து அந்த தீபச்சுடரில் வசம்பை எரித்து கரியாக்க வேண்டும்.
வசம்பு மை
பிறகு மகாலட்சுமி தாயாருக்கு உரிய நெய்யை அந்த கரித்துகளுடன் கலந்து மை தயாரிக்க வேண்டும். அந்த மையை வைத்து வீட்டு நிலை வாசல் கதவில் பின்புறமாக விநாயகப் பெருமானுக்கு உரிய சுவஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ள வேண்டும். பிறகு விநாயகப் பெருமானுக்கு உரிய ஏஞ்சல் எண்ணான 4 2 4 2 9 என்ற எண்ணை யார் கண்களுக்கும் தெரியாதவாறு எழுத வேண்டும் மறுபடியும் அடுத்த சதுர்த்தி திதி வரும்போது அந்த அனைத்தையும் துடைத்துவிட்டு மறுபடியும் எழுத வேண்டும்.
பணவரவு தடை
இதே போல் நாம் ஒவ்வொரு வளர்பிறை சதுர்த்த தினத்திலும் செய்யும்போது விநாயகப் பெருமானுடைய அருளையும் முருகப்பெருமானுடைய அருளையும் சேர்த்து பெற முடியும். பண வரவிற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் பஞ்சமும் இல்லாமல் இருக்கலாம். இந்த எளிமையான பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு வீட்டில் செய்து நன்மைகளை அடையலாம்.
இதனையும் படியுங்கள் : பணம் செழிக்க வீட்டில் வைக்க வேண்டிய படம்!