வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!
பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை உகந்ததாக இருக்கும். அந்த வகையில் சதுர்த்தி தி தெரியும் புதன்கிழமையும் விநாயகப் பெருமானுக்கு உகந்தது. மிகவும் எளிமையான விநாயகர் பெருமானை நமக்கு எப்ப
பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை உகந்ததாக இருக்கும். அந்த வகையில் சதுர்த்தி தி தெரியும் புதன்கிழமையும் விநாயகப் பெருமானுக்கு உகந்தது. மிகவும் எளிமையான விநாயகர் பெருமானை நமக்கு எப்பொழுதெல்லாம் தோன்றுகின்றதோ அப்பொழுதெல்லாம் வணங்கலாம்.
தன்னை நேசிக்கின்ற தன்னை முழுமனதோடு பிரார்த்திக்கின்ற பக்தர்களை எப்பொழுதும் விநாயகர் பெருமான் கைவிடமாட்டார் அரச மரத்தடி ஆற்றங்கரை குளக்கரை என அனைத்து இடங்களிலும் பக்தர்களுக்காக அவர்கள் வணங்குவதற்காக விநாயகப் பெருமான் அமர்ந்திருக்கிறார்.
விநாயகர் வழிபாடு
எல்லோருக்கும் பிடித்தமான மிகவும் விருப்பமான தெய்வமாக இருக்கக்கூடிய விநாயகப் பெருமானை சதுர்த்தி திதியில் வழிபட்டால் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி நன்மைகள் நடக்கும் திருமண தடை குழந்தை பாக்கியம் வேலை தடை என அனைத்தும் நீங்கி விநாயகப் பெருமான் நல்லதே செய்வார். முன் ஜென்ம பாவங்கள் கவலைகள் அனைத்தையும் நீக்கி விநாயக பெருமான் மகிழ்ச்சியை தருவார்.
சதுர்த்தி விரதம்
முழு முதல் கடவுளாக இருக்கின்ற விநாயகப் பெருமானுக்கு சதுர்த்தி திரியை மிகவும் உரிய நாளாகும். விநாயகர் என்ற சொல்லுக்கு தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்பது பொருள். அந்த வகையில் நாம் எந்த சுப காரியங்கள் தொடங்கினாலும் விநாயகரின் வழிபட்டு விட்டு தொடங்கினால் அது நன்றாகவே நிறைவு பெறுகிறோம். விநாயகரை வழிபடுவதற்கு பல நாட்கள் பிறகு தினங்கள் உண்டு ஆனாலும் கூட சதுர்த்தி விரதம் மிகவும் சிறப்பானது. வளர்பிறை சதுர்த்தி தேய்பிறை சதுர்த்தி என ஒரு மாதத்திற்கு இரண்டு முறை சதுர்த்தி வரும். இதில் தேய்பிறை சதுர்த்தியை நாம் சங்கடஹர சதுர்த்தி என கொண்டாடுகிறோம். பொதுவாக நாம் வளர்பிறை சதுர்த்தி தினங்களில் விரதம் இருந்தாலும் விநாயகப் பெருமானுடைய முழு அருளும் நமக்கு கிடைக்கும்.
சதுர்த்தி விரதம் இருக்கும் முறை
சதுர்த்தி அன்று காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகப் பெருமானை 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான அருகம்புல் வெள்ளருக்கு போன்றவற்றை மாலையாக செய்து விநாயகப் பெருமானுக்கு சாற்றி வழிபடலாம்.
மேலும் விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை பேரிக்காய் கொய்யாப்பழம் நாவல் பழம் சுண்டல் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைக்கலாம். இவற்றை வாங்க முடியாதவர்கள் அவள் பொறி சர்க்கரை பால் பழம் போன்றவற்றையும் நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம்.
சதுர்த்தி என்று விநாயகருக்கு படைத்த நெய்வேத்தியங்களை மட்டும் இரவு உணவாக சாப்பிட வேண்டும்.
சதுர்த்தியன்று நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை சாப்பிட்டு கொள்ளலாம்.
சதுர்த்தி அன்று பூஜை செய்யும் முறை
மாலை 6 மணிக்கு பிறகு பூஜை அறைகள் விநாயகர் திருவுருவப்படத்திற்கு அருகம்புல் மற்றும் பூக்களை வைத்து அலங்காரம் செய்து விளக்கு ஏற்ற வேண்டும்.
விநாயகனே முழுமனதோடு நினைத்துக் கொண்டு அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
சந்தோஷமான வாழ்க்கைக்கு விநாயகர் பெருமானிடம் என்னெல்லாம் வேண்ட வேண்டுமோ அனைத்தையும் கேட்கலாம்.
சதுர்த்தி என்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்
விநாயகப் பெருமானுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்யும் போது “ஓம் ஸ்ரீ மஹா செல்வகணபதியே போற்றி” 108 முறை சொல்லி அதன் பிறகு கைகளில் அருகம்புல்லை எடுத்து அதனை விநாயகர் திருவுருவப்படத்திற்கு கீழே வைத்து விட வேண்டும்.
பிறகு தீப தூப ஆராதனை காட்டி பூஜையை முடித்துக் கொள்ளலாம்.
பூஜை முடித்துவிட்டு ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகர் கோவில் உண்டிகளில் போடலாம் அல்லது நீங்கள் எப்பொழுது கோவிலுக்கு சென்றாலும் அப்பொழுது அந்த காணிக்கை நாணயமான ஒரு ரூபாயை விநாயகரின் கோவில் உண்டியலில் போட்டுவிடலாம்.
சதுர்த்தி விரதத்தின் பலன்கள்
சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து பூஜை மற்றும் வழிபாடு செய்து வந்தால் திருமணத்திற்காக ஈடு நாட்களாக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதுவும் சரியாகும். வேலைவாய்ப்பு வியாபாரம் போன்றவற்றில் இருந்த பிரச்சனைகள் நீங்கி வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் அனைத்து விதமான பொருளாதார நிலையும் மாறி பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் இருந்தால் அவைகள் அனைத்தும் இங்கு ஒற்றுமை அதிகரிக்கும். எனவே விநாயகப் பெருமானை முழுமனதோடு பூஜை செய்து வழிபட்டால் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
இதனையும் படியுங்கள் : தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை