Advertisement
சட்னி

பாரம்பரிய தமிழரின் வல்லாரைக் கீரை துவையல் செய்வது எப்படி ?

Advertisement

வல்லாரை கீரை உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக மாணவர்கள் வல்லாரை கீரை சாப்பிட்டால் அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வல்லாரை கீரை அடிக்கடி சமைத்துக் கொடுத்தால் அவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் வல்லாரை கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்துக்கள், மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடைங்கியுள்ளன.

ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : கிராமத்து அரைக்கீரை சாதம் எப்படி செய்வது ?

வல்லாரை கீரையைக்கொண்டு சாம்பார், துவையல் என்று செய்யலாம்.இதில் வல்லாரை கீரை துவையல் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு வல்லாரை கீரை துவையல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வல்லாரை கீரை துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

அதை படித்து செய்து சுவைத்துப் பாருங்கள். அனைவர்க்கும் மிகவும் பிடிக்கும்.

வல்லாரை கீரை துவையல்| Vallarai Keerai Thuvaiyal Recipe in Tamil

Print Recipe
வல்லாரை கீரை உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக மாணவர்கள் வல்லாரை கீரை சாப்பிட்டால் அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வல்லாரை கீரை அடிக்கடி சமைத்துக் கொடுத்தால் அவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் வல்லாரை கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்துக்கள், மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடைங்கியுள்ளன.ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை சரிவிகித அளவில் கொண்டுள்ளது. வல்லாரை
Advertisement
கீரையை கொண்டு சாம்பார், துவையல் என்று செய்யலாம்.இதில் வல்லாரை கீரை துவையல் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமான சுவையில் இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword thuvayal, துவையல்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people
Calories 15

Equipment

  • கடாய்
  • மிக்ஸி

Ingredients

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 10 சின்ன வெங்காயம் தோலுரித்து
  • 5 பல் பூண்டு
  • 2 வரமிளகாய்
  • 2 கப் வல்லாரை கீரை
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் வெல்லம்
  • 1 டேபிள் ஸ்பூன் புளிச்சாறு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, மிளகு, வரமிளகாய், மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின் அதில் வெங்காயம், பூண்டு, சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி வைக்க வேண்டும். அதை தட்டில் போட்டு சிறுது நேரம் குளிர வைக்க வேண்டும்.
  • பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வல்லாரைக் கீரையை போட்டு 2 நிமிடம் வதக்கவும், பின் அதில் தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
  • பிறகு மிக்ஸர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம், புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான வல்லாரை கீரை துவையல் தயார்.

Nutrition

Serving: 4person | Calories: 15kcal | Carbohydrates: 3.2g | Protein: 2.76g | Fat: 0.04g
Advertisement
swetha

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

5 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

6 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

8 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

13 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

16 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

17 மணி நேரங்கள் ago