- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வல்லாரை கீரை உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக மாணவர்கள் வல்லாரை கீரை சாப்பிட்டால் அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வல்லாரை கீரை அடிக்கடி சமைத்துக் கொடுத்தால் அவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் வல்லாரை கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்துக்கள், மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடைங்கியுள்ளன.
ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள் : கிராமத்து அரைக்கீரை சாதம் எப்படி செய்வது ?
வல்லாரை கீரையைக்கொண்டு சாம்பார், துவையல் என்று செய்யலாம்.இதில் வல்லாரை கீரை துவையல் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு வல்லாரை கீரை துவையல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வல்லாரை கீரை துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதை படித்து செய்து சுவைத்துப் பாருங்கள். அனைவர்க்கும் மிகவும் பிடிக்கும்.
Ingredients
Method
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, மிளகு, வரமிளகாய், மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயம், பூண்டு, சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி வைக்க வேண்டும். அதை தட்டில் போட்டு சிறுது நேரம் குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வல்லாரைக் கீரையை போட்டு 2 நிமிடம் வதக்கவும், பின் அதில் தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு மிக்ஸர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம், புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான வல்லாரை கீரை துவையல் தயார்.






