வல்லாரை கீரை துவையல் இப்படி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் நல்லா தேர்வு எழுதுவாங்க!!

நிறைய குழந்தைகளுக்கு ஞாபகம் மறதி அதிகமாக இருக்கும் அந்த மாதிரி ஞாபகம் வரது இருக்கும்போது தேர்வில் சில குழந்தைகள் நல்லா எழுத முடியாமல் போகும். அந்த மாதிரி நிறைய ஞாபகம் மறதி இருக்கிற குழந்தைகளுக்கு அடிக்கடி வல்லாரைக்கீரை சாப்பிட கொடுக்கணும். அதுலயும் இப்போ தேர்வு நடந்துகிட்டு இருக்

By Prem Kumar · 8/4/2025

நிறைய குழந்தைகளுக்கு ஞாபகம் மறதி அதிகமாக இருக்கும் அந்த மாதிரி ஞாபகம் வரது இருக்கும்போது தேர்வில் சில குழந்தைகள் நல்லா எழுத முடியாமல் போகும். அந்த மாதிரி நிறைய ஞாபகம் மறதி இருக்கிற குழந்தைகளுக்கு அடிக்கடி வல்லாரைக்கீரை சாப்பிட கொடுக்கணும். அதுலயும் இப்போ தேர்வு நடந்துகிட்டு இருக்க சமயத்துல அவங்களுக்கு இந்த மாதிரி நிறைய சாப்பிட கொடுத்தா தான் அவங்களும் தேர்வு நல்லா எழுத முடியும். அந்த வகையில வல்லாரைக்கீரை கொடுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது வல்லாரை கீரை சில பேருக்கு இருக்கக்கூடிய ஞாபகம் மறதி பிரச்சனையை சரி செய்யும்.

சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் யார் வேண்டுமானாலும் இந்த வல்லாரை கீரையை சாப்பிடலாம். வல்லாரைக் கீரையை சில பேரு கூட்டு மாதிரி செஞ்சு சாப்பிடுவாங்க சில பேரு பொரியல் செஞ்சு சாப்பிடுவாங்க. ஆனா அந்த மாதிரி சாப்பிட பிடிக்காதவங்க இப்படி ஒரு துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா வல்லாரை கீரை சாப்பிடாதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட் சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த வல்லாரை கீரை ரெசிபியை மிஸ் பண்ணாம சாப்பிட்டு பாக்கணும் இந்த துவையலை சுடசுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். ரொம்ப டேஸ்டா இருக்கும்.

குழந்தைகளுக்கு இந்த துவையல் செஞ்சு அதுல சாதம் போட்டு கிளறி ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு கூட கொடுத்து விடலாம். இதுல தேங்காய் துண்டுகள் புளி இதெல்லாம் சேர்க்கிறதால கண்டிப்பா ரொம்ப கசப்பு தெரியாது. இது வல்லாரைக்கீரை அப்படின்னு சொல்லாமலேயே குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்திடலாம். நிறைய சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வாங்க. குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறது மூலமா அவங்களோட ஞாபகம் மறதி பிரச்சனை சரியாகும். நினைவாற்றல் அதிகரிக்கும் இப்ப வாங்க இந்த சுவையான வல்லாரைக் கீரை துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை வல்லாரை கீரை வாங்கினால் ருசியான வல்லாரை கீரை சாதம் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full