மணக்க மணக்க வரகு ரசம் சாதம் குக்கரில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!!

தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி தான் ரசம். தென்னிந்திய மக்களால் விரும்பி உண்ணப்படும் ரசமானது புளிச்சாறு, தக்காளி, மிளகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் பிற மசாலா பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. புளிப்புச் ச

By Prem Kumar · 24/9/2024

தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி தான் ரசம். தென்னிந்திய மக்களால் விரும்பி உண்ணப்படும் ரசமானது புளிச்சாறு, தக்காளி, மிளகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் பிற மசாலா பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. புளிப்புச் சுவையுடன் இருக்கும் ரசத்தை சூப் போன்று ஒரு பௌலில் ஊற்றி குடிக்கலாம் அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். ரசம் ஒரு சுவையான ரெசிபி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு சூப். இன்று நாம் மதிய உணவாக சுட சுட சாப்பிடுவதற்கு ஏற்ற வரகு ரசம் சாதம் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்.

பொதுவாக அசைவ பிரியர்கள் சைவ பிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த ரசம் சாதம் சாப்பிடுவது மிகவும் பிடித்து போனதாக இருக்கும். ரச சாதம் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள் அதனால் இது போன்ற ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரச சாதத்தை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ரசமானது புளிச்சாற்றினைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. புளியில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அல்லது பாலிசாக்கரைடுகள் உள்ளன. எனவே தினமும் ரசத்தை குடித்து வந்தால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி, குடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற செய்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுத்து நல்ல பாதுகாப்பை அளிக்கிறது. இதன் விளைவாக சருமம் நீண்ட காலம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அதனால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த வரகு ரசம் சாதம் செய்து கொடுங்கள் இது உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ரெசிபியாக இது மாறி போகும் மறுமுறையும் உங்களை இது போல் செய்து மறுமுறையும் சொல்லி தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full