வரலட்சுமி நோன்பு (16.8.2024) அன்று வாங்க வேண்டிய மூன்று பொருட்கள்
பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் கணவருக்கு நல்ல ஆயுள் கொடுக்க வேண்டும் கணவர் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து வழிபடுவது தான் இந்த வரலட்சுமி விரதத்தின் முக்கிய நோக்கம். ஒரு சிலர் வீட்டில் கலசம் வைத்து தயாரை வழிபடுவார்கள் ஒரு சிலர் கலசம் வைக்காமல
பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் கணவருக்கு நல்ல ஆயுள் கொடுக்க வேண்டும் கணவர் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து வழிபடுவது தான் இந்த வரலட்சுமி விரதத்தின் முக்கிய நோக்கம். ஒரு சிலர் வீட்டில் கலசம் வைத்து தயாரை வழிபடுவார்கள் ஒரு சிலர் கலசம் வைக்காமலேயே விரதமிருந்து வழிபட்டு பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் போன்றவற்றை கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி வழிபடுவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிபாட்டு முறைகளை பின்பற்றி அம்பாளை வழிபடுவார்கள்.
வரலட்சுமி விரதத்தின் போது வீட்டில் கலசம் வைத்து வழிபட முடியாதவர்கள் வெறும் மூன்று முக்கியமான பொருட்களை வைத்து வழிபட்டால் அம்பாளுடைய ஆசீர்வாதம் கிடைப்பதோடு குபேர சம்பத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பழக்கமே இல்லாமல் இருப்பார்கள் அப்படி இல்லாமல் இருப்பவர்கள் கூட மூன்று முக்கியமான பொருட்களை வாங்கி வைத்தால் வீட்டில் கலசம் வைத்து வணங்கிய பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னென்ன பொருட்கள் என்பதை பற்றி பார்க்கலாம்
வரலட்சுமி நோன்பு என்று வாங்கி வைக்க வேண்டிய மூன்று பொருட்கள்
நெல்லிக்கனி
வரலட்சுமி நோன்பு அன்று வீட்டில் நெல்லிக்கனி வாங்கி வைப்பது மிகவும் சிறந்தது நல்ல தரமான பெரிய நெல்லிக்கனிகளாக வாங்கி பூஜை அறையில் அம்பாளுக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும் அந்த நெல்லிக்கனியை முந்தைய நாளன்றி வாங்க கூடாது வரலட்சுமி நோன்பு அன்று தான் வாங்க வேண்டும். குபேரருக்கு உகந்த பொருளாக பார்க்கப்படும் நெல்லிக்கனியானது குபேரர் வறுமையில் துன்பப்படும் போது நெல்லி மரத்தை வளர்த்து வழிப்படுமாறு அவருக்கு யாரோ சொன்னதாக சில புராணக் கதைகள் உள்ளது. அவ்வளவு சிறப்பு பெற்ற இந்த நெல்லி மரம் மகாலட்சுமி தாயார் குபேரர் இருவருக்குமே உகந்தது எனவே வரலட்சுமி நோன்பு அன்று நெல்லிக்கனியை பூஜை அறையில் வாங்கி வைப்பது மிகவும் சிறப்பான ஒரு விஷயம்
கல் உப்பு
மகாலட்சுமி தாயார் இன் அம்சமாக விளங்க கூடிய கல் உப்பை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் வாங்கி வைப்பது செல்வ கடாட்சத்தை அதிகரிக்கும் எனவே வரலட்சுமி நோன்பு அன்று மறக்காமல் கல் உப்பு வாங்கி வைத்து அம்பாளை வழிபட வேண்டும்.
மஞ்சள் கிழங்கு
மேலும் அம்பாளுக்கு ஒரே மஞ்சள் நிற துண்டு அல்லது ஜாக்கெட்டு துணி வாங்குவது மிகவும் நல்லது இதில் ஒரு மஞ்சள் கிழங்கினை வாங்கி வைத்து மகாலட்சுமி தயாரிக்கும் முன்னே வைத்து வணங்கிய பிறகு அதை நீங்கள் உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கும்போது அன்றைய தினத்தில் வீட்டில் கலசம் வைத்து வழிபட்டதற்கான முழு பலனும் கிடைக்கும்.
வரலட்சுமி நோன்பு அன்று கலசம் வைத்து வழிபடுபவர்கள் அவர்கள் எப்பொழுதும் பின்பற்றக் கூடிய வழிப்பாட்டு முறையை பின்பற்றி விட்டு இந்த மூன்று பொருட்களையும் வாங்கி வைத்து வழிபடலாம் முடியாதவர்கள் இந்த மூன்று பொருட்களை மட்டுமாவது வாங்கி வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபட்டு வந்தால் குபேர சம்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம்.
இதையும் படியுங்கள் : மகாலட்சுமி வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய மருதாணி இலைகளைக் கொண்டு இந்த ஒன்றை மட்டும் பண்ணுங்க!!