கேட்ட வரங்களை தந்து அருளும் சென்னை நிமிஷாம்பாள்!!

தென்னிந்தியாவின் நுழைவாயிலாக சென்னை கருதப்படுகிறது.‌ இது தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழ்கிறது. இங்கு அருங்காட்சியகம், ஆங்கிலேயர் கால நினைவுச்சின்னம், கோவில்கள், கடற்கரை போன்ற நூற்றுக்கணக்கான சுற்றுலா தலங்கள் உள்ளன. இப்படி பட்ட சென்னையில் பலருக்கும் தெரியாத இடங்களும் உள்ளன. அதில் ஒன

By ·

தென்னிந்தியாவின் நுழைவாயிலாக சென்னை கருதப்படுகிறது.‌ இது தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழ்கிறது. இங்கு அருங்காட்சியகம், ஆங்கிலேயர் கால நினைவுச்சின்னம், கோவில்கள், கடற்கரை போன்ற நூற்றுக்கணக்கான சுற்றுலா தலங்கள் உள்ளன. இப்படி பட்ட சென்னையில் பலருக்கும் தெரியாத இடங்களும் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த நிமிஷாம்பாள் கோவில். சமயபுரம் மாரியம்மனைப்போலவே பக்தர்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுப்பவளாக திகழ்கிறாள் இந்த நிமிஷாம்பாள் தேவி. சமீப காலமாக தான் இந்த அம்பிகையின் மகிமையை கேள்விப் பட்டு பலருக்கும் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். கேட்ட வரங்களை தரும் இந்த அம்மனை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

நிமிஷாம்பாள் பெயர் காரணம்

நிமிஷாம்பா என்பது பார்வதி தேவியின் மற்றொரு பெயர். இவள் பக்தர்களின் பிரச்னைகளை ஒரு நிமிடத்தில் நீக்கி விடுவதால் ‘நிமிஷாம்பா’ என்று அழைக்கப்படுகிறாள். நிமிஷா என்றால் நிமிடம் என்று பொருள். ஆனால் அது உண்மையல்ல. நிமிஷம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கண்கள் என்று பெயர். ஒரே ஒரு பார்வையில் பக்தர்களின் துன்பங்களை சம்ஹாரம் செய்து, அவர்கள் வேண்டிய வரங்களை கொடுக்கக் கூடியவள் என்பதால் இந்த அம்பிகைக்கு நிமிஷாம்பாள் என்ற திருநாமம் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

நிமிஷாம்பாள் தலம் எங்குள்ளது?

சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் நெரிசல் மிகுந்த காசிச்செட்டி தெருவில் இக்கோவில் அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியான சௌகார் பேட்டையில் தெருக்களில் நடப்பது கூட சிரமமாக இருக்கும். இவ்வளவு பரபரப்பான பகுதியில் இந்த அமைதி தரும் மிகவும் பழமையான கோவில் இருப்பது பலருக்கு தெரிவதில்லை.

நிமிஷாம்பாள் வரலாறு

ஒரு நாட்டை ஆண்டு வந்த முக்தராஜன் என்ற அரசன் நல்லாட்சி செய்து வந்தான். ஒரு சமயம், ஜானு சுமண்டலன் என்ற அசுரன் முக்தராஜனின் நாட்டு மக்களுக்கு பெரும் துன்பத்தை அளித்து வந்தான். தன்நாட்டுமக்களைத் துன்புறுத்திய அரக்கன் ஜானு சுமண்டலனை எதிர்த்து முக்தராஜன் போராடியும், அவனால் அரக்கனை கொல்ல முடிய வில்லை. அம்பாள் பக்தனான மன்னன், அருள் வேண்டி உண்ணாவிரதம் இருந்து தன்னை வருத்தினான். பக்தனுடைய வேண்டுகோளுக்காக மனம் இரங்கிய அம்பாள், அரக்கன் முன்போய் நின்னு கண்ணை மூடிக் கண் திறந்த நிமிஷத்தில் அரக்கனை வதம் செய்து, அவன் பிடியில் இருந்து நாட்டுமக்களைக் காப்பாற்றினாள். அம்மனுக்கு நிமிஷாம்பாள் என்ற பெயரும் அப்போ வந்தது தான்!

நிமிஷாம்பாள் சென்னைக்கு வந்த கதை

நிமிஷாம்பாளை சத்ரிய குலத்தினர் குலதெய்வமாக வணங்கினார்கள். சென்னை சவுகார்பேட்டையில் சத்ரிய மற்றும் வைஷ்ணவ குலத்தவர்கள் அதிகம் வசித்து வந்தனர். ஒரு நாள் வட மாநிலத்தில் இருந்து வியாபாரம் செய்வதற்காக சென்னை வந்து வியாபாரி ஒருவர் குடியிருக்க நிலம் ஒன்றை வாங்கினார். அங்கு அவர் கிணறு உருவாக்க தோண்டிய இடத்தில் நிமிஷாம்பாள் சிலை கிடைத்துள்ளது. கிணற்றிலிருந்து நிமிஷாம்பாள் சிலை கிடைத்ததை கண்டு மன மகிழ்ந்த சத்ரிய குலத்தினர் அங்கு கோவில் கட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் சிறியதாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம் என்பதால் பலரும் வந்து வணங்கி செல்கிறார்கள். இங்குள்ள வியாபாரிகள் தினமும் காலையில் வந்து இந்த அம்மனை தரிசித்த பிறகே தங்களின் வேலைகளை துவக்குகிறார்கள்.

கஷ்டங்கள் நீக்கும் நிமிஷாம்பாள்

நம்பிக்கையோடு இந்த தாயின் கோவிலுக்கு வந்து வேண்டிக்கிட்டவர்களின் கஷ்டங்கள் அனைத்தும் சீக்கிரம் தீர்ந்து விடும். அதுவும் பௌர்ணமி நாட்கள், நிமிஷாம்பாள் ஜயந்தி, பிரதோஷம், போன்ற விசேஷ தினங்களில் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து, வேண்டுதல்கள் வைத்தால் கூடிய விரைவில் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடுமாம். அதுமட்டுமல்லாமல் அன்னை நிமிஷாம்பாள், யாக குண்டத்தில் இருந்து வெளிப்பட்டு, அசுரனை வதம் செய்தது தசமி திதி நாளில். அதனால் தசமி திதியில் அதிகளானவர்கள் வந்து வழிபடுகிறார்கள். இந்த தினங்களில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் நபர்கள் வந்து இந்த தாயாரை வணங்கி விட்டு செல்கின்றனர்.

இதனையும் படியுங்கள் : அருள் தரும் ஆடி மாதத்தில் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை