வீட்டின் இந்த திசையில் துளசி செடியை வைத்தால் பண கஷ்டம் விலகுமாம்!
பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் மரம் செடி கொடிகளை வளர்க்க ஆசைப்படுவார்கள் அதிலும் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடிய செடிகளையும் வீட்டிற்கு காற்றோட்டத்தை கொடுக்கக்கூடிய மரம் செடிகளை வளர்ப்பதில் அனைவரும் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி நான் வீடுகளில் மரம் செடி கொடிகளை வளர
பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் மரம் செடி கொடிகளை வளர்க்க ஆசைப்படுவார்கள் அதிலும் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடிய செடிகளையும் வீட்டிற்கு காற்றோட்டத்தை கொடுக்கக்கூடிய மரம் செடிகளை வளர்ப்பதில் அனைவரும் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி நான் வீடுகளில் மரம் செடி கொடிகளை வளர்ப்பது இயற்கைக்கும் நல்லது நமக்கும் நல்லது. அந்த வகையில் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் துளசி மற்றும் மணி பிளான்ட் போன்றவைகளை வளர்ப்பதால் வீடு எப்பொழுதும் மங்களகரமாக இருக்கும். ஆனால் துளசி செடியை எந்த திசையில் நோக்கி வளர்க்க வேண்டும் என்பது சில விதிமுறைகளை பின்பற்றினால் நம் வீட்டில் வருமானம் அதிகரிக்கும். அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசியின் மகிமை
துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம், அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான். சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும். யாருடைய வீட்டில் துளசிசெடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலம். வீட்டில் துளசி செடி வளர்ப்பதன் மூலம், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் துளசி செடி வளர்ப்பதன் மூலம், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு மற்றும் புரிதல் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
வீட்டில் துளசியை வளர்க்கலாமா ?
இந்து மதத்தில் துளசிச் செடி மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்துக்கள் பெரும்பாலானவர்களின் வீடுகளிலும் துளசி செடி வளர்க்கப்படும். வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்ப்பதால் நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும். துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பது ஸ்ரீமகாலட்சுமியை மகிழ்விப்பதாக ஐதீகம். ஆனாலும், துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பதற்கு வாஸ்து மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. தினமும் காலையில் துளசி செடிக்கு தண்ணீர் தர்ப்பணம், விளக்கேற்றி பூஜை செய்வது நல்லது எனக் கூறப்படுகிறது. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவின் அம்சமான இந்த துளசியைப் பூஜித்து வருவதன் மூலம் விஷ்ணு பகவானின் ஆசி முழுவதுமாக நமக்கு கிடைத்துவிடுமென்பது நம்பிக்கை.
எந்த திசையில் துளசி செடியை வளர்க்கலாம் ?
துளசி செடியை வீடடின் கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் வைக்கலாம். இந்த திசைகளில் துளசி செடியை வைப்பதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இந்த திசையில் துளசி செடியை வைத்து வளர்ப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை வரவழைத்து, எதிர்மறை ஆற்றல்களை விலக்கி வீட்டில் நல்ல சூழலை உருவாக்க உதவுகிறது. இது வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது. வடக்கு திசை செல்வ திசை என்பதால் அந்த திசையில் துளசி செடியை வைப்பது வீட்டிற்கு நன்மை பயக்கும்.
இதனையும் படியுங்கள் : மறந்தும் கூட துளசி செடிக்கு அருகில் வைக்க கூடாது பொருட்கள் ? அப்படி வைத்தால் நடக்கும் தெரியுமா ?