நேர்மறை ஆற்றல் அதிகரிக்க கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?‌

வாஸ்து சாஸ்திர குறிப்புகள் நம் வீட்டை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும். எந்த விஷயங்கள் எங்கு வைத்தால் நேர்மறை சக்திகள் ஏற்படும் என்பதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது. அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சுவர் கடிகாரம்தான். தாத்தா பாட்டி காலத்தில் கடிகாரம் என்பது அத்தியாவசிய பொருளாக

By Prem Kumar · 16/9/2024

வாஸ்து சாஸ்திர குறிப்புகள் நம் வீட்டை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும். எந்த விஷயங்கள் எங்கு வைத்தால் நேர்மறை சக்திகள் ஏற்படும் என்பதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது. அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சுவர் கடிகாரம்தான். தாத்தா பாட்டி காலத்தில் கடிகாரம் என்பது அத்தியாவசிய பொருளாக மட்டுமின்றி ஆடம்பர பொருளாகவும் கவுரவத்தை வெளிப்படுத்தும் பொருளாகவும் கடிகாரம் இருந்துள்ளது. விலை உயர்ந்த மரத்தால் செய்யப்பட்ட கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பார்கள். இன்றைக்கு செல்போனில் நேரம் பார்த்தாலும் ஒவ்வொருவர் வீட்டிலும் கடிகாரத்தை வைத்திருக்கின்றனர். ஆனால் பல நேரங்களில் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறான திசையில் கடிகாரத்தை வைப்பது வாஸ்து குறைபாட்டிற்கு காரணமாக அமைந்து விடுகிறது. அத்தகைய சூழலில், பல நேரங்களில் எதிர்மறையான ஆற்றல் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறது. ஆகையால் இந்த பதிவில் எந்த திசையில் கடிகாரத்தை மாட்ட வேண்டும் என்று பார்ப்போம்.

கடிகாரம்

கடிகாரம் என்பது அலங்கார பொருள் அல்ல. அது உயிரோட்டமுடையது. எப்போதுமே ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓடாத கடிகாரமாக இருந்தாலோ ரிப்பேர் ஆன கடிகாரமாக இருந்தாலோ அது எவ்வளவுதான் அழகான கடிகாரமாக இருந்தாலும் அதனை சுவற்றில் மாட்டி வைக்கக்கூடாது. உடைந்த கடிகாரம் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதனால் எதிர்மறை ஆற்றல்தான் வீட்டிற்குள் வரும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். நமது வீட்டில் சரியான திசையில் மற்றும் சரியான இடத்தில் வைக்கப்படும் கடிகாரம் நமது விதியை சரியான திசையில் கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை.

எந்த திசையில் கடிகாரத்தை மாட்டலாம்?

வாஸ்து படி, கடிகாரத்தை வைக்க சிறந்த திசைகள் கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு சுவர்கள் ஆகும். இந்த திசைகள் நேர்மறை ஆற்றல் மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடையவை. வடக்கு திசை செழிப்பு மற்றும் செல்வத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த திசையில் கடிகாரத்தை வைப்பது நிதி நிலைத்தன்மையையும் வாய்ப்புகளையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. வடக்கு பக்க சுவர்களில் கடிகாரத்தை மாட்ட முடியாதவர்கள் கிழக்கு சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைக்கலாம்.

எந்த திசையில் கடிகாரத்தை மாட்டக்கூடாது?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கடிகாரத்தை தெற்கு மற்றும் மேற்கு திசையில் வைக்கக்கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறையான நிகழ்வுகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ஒருபோதும் தெற்கு சுவரில் மட்டும் கடிகாரத்தை மாட்ட கூடாது. தெற்கு திசை எமனின் திசை. நம்முடைய முன்னோர்கள் வாழும் திசை. எனவே தெற்கு திசையில் மாட்டி வைக்கும் கடிகாரம் நம்முடைய மறைந்த முன்னோர்களையும் எமதர்ம ராஜாவையும் தொந்தரவு செய்யும்.

வீட்டில் கடிகாரம் வைப்பதற்கான வாஸ்து டிப்ஸ்

உடைந்து போன அல்லது நின்று போன கடிகாரத்தை வீட்டில் வைக்க கூடாது, அதனை உடனே சரி செய்துவிடவும். இல்லையெனில் அதை உடனே அகற்றிவிடுவது அவசியம்.

நீங்கள் வடக்கு நோக்கிய சுவரில் ஒரு கடிகாரத்தை மாட்டினால் அந்தச் சுவருக்கு நீலம் அல்லது வானம் நீல வண்ணம் பூசலாம்.

உங்கள் வீட்டின் படுக்கையறையில் சுவர் கடிகாரத்தை மாட்டினால் கூட அங்கும் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் மட்டுமே மாட்ட வேண்டும்.

வீட்டில் கடிகாரத்தை சரியான நேரத்தை காட்டும் வகையில் வைத்திருக்க வேண்டும். அல்லது அதிக பட்சம் 10 நிமிடம் வரைக்கும் அதிகமாக வைக்கலாம்.

வீட்டின் கதவிற்கு நேர் மேலே கடிகாரத்தை மாட்டக்கூடாது. வாசலுக்கு வெளியே, பால்கனியிலும் கடிகாரங்களை மாட்டி வைக்கக்கூடாது.

நம்மை விட வயது குறைவானவர்களுக்கு ஏதாவது விஷேசம் என்றால் பரிசாக கடிகாரத்தை தரலாம். அதே நேரத்தில் வயது அதிகமானவர்களுக்கு கடிகாரத்தை பரிசாக தரக்கூடாது.

இதனையும் படியுங்கள் : வாஸ்துப்படி வீட்டில் இந்த பறவைகளின் படங்களை வைத்தால், பணப் பிரச்சனை குறைந்து.. செல்வம் பெருகும்..

Recipes AMP · Quick view
View full