வீட்டின் இந்த திசையில் அல்லது இந்த இடங்களில் மயிலிறகை வைத்தால் பணம் பெருகுமாம்!
பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும். அதில்
பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும். அதில் ஒன்று தான் இந்த மயிலிறகு. வெறும் பணத்திற்காக மட்டுமல்ல, பணத்தைத் தாண்டி நிறைய நல்ல விஷயங்களை, நேர்மறை ஆற்றலை கொடுக்கக் கூடிய சக்தி இந்த மயில் இறகுக்கு உண்டு. மயில் தோகை வைத்து சில காரியங்களை செய்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். மயிலிறகை பிடிக்கவில்லை என்று ஒருவரால் கூட சொல்ல முடியாது. அந்த அளவுக்கு பேரழகை கொண்ட இந்த மயிலிறகை நம்முடைய வீட்டில் எதற்கெல்லாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
பணம் சேர
பணம் தான் அனைத்திற்கும் பிரதானமாக இருக்கிறது. அதனால் சின்னதாக ஒரு மயிலிறகை பர்ஸில் அல்லது பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் நகை வைக்கும் இடத்தில் வைக்கலாம். இதனால் வீண் விரயம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, வீட்டிற்கு வர வேண்டிய செல்வம் தடையின்றி வந்து கொண்டே இருக்கும். உங்கள் வீட்டில் ஏதேனும் பணப் பிரச்சனைகள் இருப்பின் வீட்டின் தென்கிழக்கு பகுதியிலோ அல்லது பணம் உள்ள இடத்திலோ மயில் தோகைகளை வைக்க வேண்டும். இது நிதி சிக்கலை தீர்க்கும்.
பூஜையறை
பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சரிசி வைத்து, அதில் மயிலிறகை நேராக இருக்கும் படி வைக்க வேண்டும். மயிலிறகிற்கு தெய்வீக சக்தி உள்ளது. அதனால் அது வீடு முழுவதும் தெய்வீக சக்தியை எப்போதும் நிறைந்திருக்க செய்யும். இதனால் வீட்டில் தீயசக்திகள் அண்டாது. அதோடு வீட்டில் உள்ள கடன் பிரச்னைகளும் விலகும். தடைபட்ட வேலைகளையும் எளிதாக முடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் வீட்டிற்கு புதிதாக வருபவர்களால் கண் திருஷ்டி, பொறாமை, தீய எண்ணங்களால் வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.
கனவு
இன்றும் பலருக்கும் கிடைக்காத வரமாக இருப்பது உறக்கம். அப்படியே தூக்கம் வந்தாலும் சிலர் அடிக்கடி வரக்கூடிய கெட்ட கனவால் பாதிக்கப்படுவதுண்டு. என்ன தான் தூங்கி எழுந்தாலும், அந்த தூக்கத்தால் முழு திருப்தி அடைய முடியாத, நல்ல உடல் புத்துணர்ச்சி அற்ற நிலை கெட்ட கனவுகளால் ஏற்படுவதுண்டு. இதனால் இரவில் படுக்கும் முன் உங்கள் தலையணையின் கீழ் மயில் இறகை வைத்தால் அதுபோன்ற கனவுகள் வராது.
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க
ஒவ்வொருவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சினைகளை மீறி மனதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், நிறைவாகவும் வைத்துக் கொள்வது என்பது சாதாரண விஷயமல்ல. நல்ல குடும்ப சூழல் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இதற்கு உங்கள் தலையணைக்கு அடியில் மயில் தோகை வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் குடும்பத்தில் அன்பை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
பாடப்புத்தகம்
குழந்தைக்கு கல்வியில் ஆர்வம் இல்லை என்றால், மயில் தோகை பாடப்புத்தகத்தில் வைத்தால், குழந்தையின் கல்வியில் ஆர்வம் ஏற்படலாம். இந்த மயிலிறகை புத்தகம் அடுக்கி வைத்திருக்கும் கப்போரில் வைக்கலாம். குழந்தைகள் பையில் வைக்கலாம். அவர்களுக்கு படிப்பில் அதிக ஆர்வம் வர இந்த மயிலிறகு சின்ன உதவி செய்யும்.
இதனையும் படியுங்கள் : வாஸ்துப்படி வீட்டில் இந்த பறவைகளின் படங்களை வைத்தால், பணப் பிரச்சனை குறைந்து.. செல்வம் பெருகும்..