வாஸ்து சாஸ்திரத்தின் பண்டைய அறிவியலின் படி, வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் ஆற்றல் அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை கணிசமாக பாதிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி எந்த திசை என்பதை விட எல்லாம் எதை எங்கே வைக்கிறோம் என்பதை தான் வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அதில் மட்டுமே மிக அதீத கவனம் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவை தான் நேர்மறை ஆற்றல்களை மேம்படுத்தும் சக்தி கொண்டவையாகவும் அமைகின்றன.
இந்த வாஸ்து சாஸ்திரத்தை தவறாக கடைப்பிடிக்கும் போது வரவுக்கு மீறிய செலவு வரும். வடமேற்கில் இருந்தால் பணம் வரும் போகும் ஆனால் நிரந்தரமான கடன்காரனாக வைத்து அல்லல்படுத்தும். தென்மேற்கு மூலை அதாவது குபேர மூலையில் வடக்கு திசையை பார்த்த மாதிரி பணப்பெட்டி இருந்தால் கண்டிப்பாக பணத்தட்டுப்பாடு ஏற்படாது செலவுகளை திட்டமிட்டு செய்து விரயத்தை குறைக்கலாம்.
ஒவ்வொரு பொருட்களும் வாஸ்து பிரச்சனை இருக்கும்
வாஸ்து ரீதியாக சில பொருட்கள் நமக்கு அதிர்ஷ்டத்தையும், சில பொருட்கள் நமது துரதிர்ஷ்டத்தையும் கொடுப்பவையாக இருக்கின்றன. குறிப்பாக பலவித சிலைகள் வீட்டில் அலங்கரிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எல்லா சிலைகளும் நேர்மறை ஆற்றல்களை வெளியிடாது. சிலவை எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும். எனவே வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருள்களையும் வாஸ்துபடி நாம் வைக்கும் பொழுது நமக்கும் வரும் பண பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகள் அனைத்தையும் நாமலால் தவிர்க்க இயலும்.
பணம் சேர இந்த 5 விஷயங்களை மட்டும் செய்யுங்கள்
உங்கள் வீட்டில் தென்கிழக்கு மூலையில் நீர் தொடர்பான பொருள் இருந்தால் உடனே அதை அகற்றிவிடுங்கள். அந்த திசையில் சிவப்பு நிறத்தில் பல்பு மாட்டுங்கள்.
உங்கள் வீட்டில் பீரோ அல்லது பணம் வைக்கும் பெட்டியை வடதிசை நோக்கி வையுங்கள். அப்படி இல்லையென்றால் கிழக்கு திசையில் வையுங்கள். இப்படி செய்தால் பண வரவு அதிகரிக்கும்.
உங்கள் வீட்டில் பித்தளை அல்லது வெள்ளை நிறத்தில் யானை சிலை வைத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும். வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைத்தால் மிகவும் சிறந்தது.
வடகிழக்கு மூலையில் வாட்டர் ஃபவுண்டைன் வைத்தால், நமக்கு பணம் வந்து கொண்டே இருக்கும்.
வடகிழக்கு திசை தான் ஒவ்வொரு வீட்டில் புனிதமான திசையாக கருதப்படுகிறது. இதனால், வடகிழக்கு திசை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த எளிய முறைகளை கடைபிடித்தாலே போதும் நமது பண பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.