Advertisement
சைவம்

ஸ்ரீரங்கம் அய்யர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

வத்த குழம்பு என்றால் யாரும் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டார்கள் மாறாக அனைவர் வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை ஸ்ரீரங்கம் அய்யர் வீட்டு ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். ஏனெனில் அய்யர் வீடுகளில் பக்குவமாக செய்யும் வத்த குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : மறுமுறை வைக்க தோன்றும் மணமணக்கும் அய்யர் வீட்டு சாம்பார் செய்வது எப்படி ?

Advertisement

இங்கு ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் இதை படித்து பார்த்து உங்கள் வீட்டில் சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ருசியாகவும் இருக்கும் அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள். இந்த வாரம் ஒரு நாள் ட்ரைப் பன்னி பாருங்கள்.

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு | sri rangam vatha kulambu recipe in tamil

Print Recipe
இங்கு ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் இதை படித்து பார்த்து உங்கள் வீட்டில் சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ருசியாகவும் இருக்கும் அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள். இந்த வாரம் ஒரு நாள் ட்ரைப் பன்னி பாருங்கள்.
Course Kulambu
Cuisine Indian, TAMIL
Keyword sri rangam vatha kulambu, வத்த குழம்பு
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 69

Equipment

  • 2 குழம்பு பாத்திரம்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப் சுண்டக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 வரமிளகாய்
  • புளி எலுமிச்சை அளவு
  • 50 கிராம் சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 1 டேபிள் ஸ்பூன் வெல்லம்
  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

தாளிப்பதற்கு:

  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு

Instructions

  • முதலில் எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து கரைத்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
    Advertisement
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து பொடி செய்துக் கொள்ளவும்.
  • பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி,மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, அவற்றை குளிர வைத்து மிக்சியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணைய் ஊற்றி எண்ணைய் காய்ந்ததும், கடுகு சேர்த்து வெடித்ததும், உளுத்தம் பருப்பு, மற்றும் கடலைப் பருப்பு, சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.
  • அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
  • பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடி,மற்றும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
  • குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்எண்ணைய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி!!!

Nutrition

Serving: 500கிராம் | Calories: 69kcal | Carbohydrates: 36g | Protein: 9.87g | Saturated Fat: 1.4g | Cholesterol: 26.7mg | Sodium: 38mg | Potassium: 387mg | Sugar: 3.6g
Advertisement
swetha

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

6 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

7 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

9 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

14 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

17 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

18 மணி நேரங்கள் ago