வாழைப்பூ 65 இனி இப்படி செய்து பாருங்க!
வாழைப் பூவை வைத்து ஸ்பெஷலான ஒரு 65 ரெசிபியை தான் இன்று நாம் தெரிஞ்சுக்க போறோம். வாழைப்பூவை கூட்டாக செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். வாழைப்பூவை வைத்து மிஞ்சிப்போனால் வாழைப்பூ வடை செய்வோம். ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இல்லை. அதனால் ஒர
வாழைப் பூவை வைத்து ஸ்பெஷலான ஒரு 65 ரெசிபியை தான் இன்று நாம் தெரிஞ்சுக்க போறோம். வாழைப்பூவை கூட்டாக செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். வாழைப்பூவை வைத்து மிஞ்சிப்போனால் வாழைப்பூ வடை செய்வோம். ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இல்லை. அதனால் ஒரு முறை இப்படி 65 வாழைப்பூவில் போட்டுக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். வாழைப்பழம் மட்டுமல்லாமல், அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை.
வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது! அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது.
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும். மாலையில் மொறு மொறுவென்று சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதனைக் கொண்டு 65 செய்து சாப்பிடுங்கள். நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. இதை நாம் குறைந்த பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி செய்து விடலாம். இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. அது மட்டுமின்றி பள்ளியிலிருந்து வரும் நம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த வாழைப்பூ 65 செய்து கொடுத்தால் அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான வாழைப்பூ தயிர் வடை இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!