Home ஸ்நாக்ஸ் வாழைப்பூ 65 இனி இப்படி செய்து பாருங்க!

வாழைப்பூ 65 இனி இப்படி செய்து பாருங்க!

வாழைப் பூவை வைத்து ஸ்பெஷலான ஒரு 65 ரெசிபியை தான் இன்று நாம் தெரிஞ்சுக்க போறோம். வாழைப்பூவை கூட்டாக செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். வாழைப்பூவை வைத்து மிஞ்சிப்போனால் வாழைப்பூ வடை செய்வோம். ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இல்லை. அதனால் ஒரு முறை இப்படி 65 வாழைப்பூவில் போட்டுக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். வாழைப்பழம் மட்டுமல்லாமல், அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை.

-விளம்பரம்-

வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது! அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது.

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும். மாலையில் மொறு மொறுவென்று சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதனைக் கொண்டு 65 செய்து சாப்பிடுங்கள். நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. இதை நாம் குறைந்த பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி செய்து விடலாம். இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. அது மட்டுமின்றி பள்ளியிலிருந்து வரும் நம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த வாழைப்பூ 65 செய்து கொடுத்தால் அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.

Print
5 from 1 vote

வாழைப்பூ 65 | Vazhaipoo 65 Recipe In Tamil

வாழைப் பூவை வைத்து ஸ்பெஷலான ஒரு 65 ரெசிபியை தான் இன்று நாம் தெரிஞ்சுக்க போறோம். வாழைப்பூவை கூட்டாக செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். வாழைப்பூவை வைத்து மிஞ்சிப்போனால் வாழைப்பூ வடை செய்வோம். ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இல்லை. அதனால் ஒரு முறை இப்படி 65 வாழைப்பூவில் போட்டுக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். மாலையில் மொறு மொறுவென்று சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதனைக் கொண்டு 65 செய்து சாப்பிடுங்கள். நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Vazhaipoo 65
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 வாழைப்பூ
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 கப் கடலை மாவு
  • 1/4 கப் அரிசி மாவு
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து தயிர் கலந்து தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு வாழைப்பூவை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ 65 தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாம்பார் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 2.7g | Protein: 4.1g | Fat: 1.7g | Sodium: 65mg | Potassium: 358mg | Fiber: 3.1g | Vitamin A: 34IU | Vitamin C: 67mg | Calcium: 22mg | Iron: 7.2mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான வாழைப்பூ தயிர் வடை‌ இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!