வாழைப்பூவை வைத்து ஒரு குருமா சில நிமிடத்தில் செய்வது விடலாம்! இந்த குருமா வாழைப்பூவுக்கு புதுசு!

- Advertisement -

வாழைப்பூ சாம்பார்,பொரியல்  இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. ஆரோக்கியத்துடன் கூடிய சுவையான ரெசிபி இதோ பொதுவாகவே நம்முடைய உணவு பட்டியலில் இந்த வாழைப்பூவை மறந்து விட்டோம். ஆனால், வாரத்தில் ஒருமுறையாவது கட்டாயமாக வாழைப்பூவை நம்முடைய சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும் அது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது.

-விளம்பரம்-

வாழைப்பூவை முந்தைய நாளே வாங்கி சுத்தம் செய்த வைத்துவிட்டால், வெறும் பத்தே நிமிடத்தில் சூப்பரான இந்த கிரேவியை செய்துவிடலாம். சுட சுட சப்பாத்தி, தோசை, சுட சுட சாதம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட இது அருமையாக இருக்கும்.

- Advertisement -

ஆரோக்கியம் சம்பந்தமான எந்த ஒரு உணவினை சமைத்து கொடுத்தாலும் வீட்டில் உள்ளவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவது என்பது அரிதான ஒன்றாகும். எனினும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை வாரத்திற்கு 2 முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய  வாழைப்பூ வைத்து செய்யக்கூடிய ஒரு புதுவித வாழைப்பூ குருமா உணவினை பற்றியே இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Print
3.67 from 3 votes

வாழைப்பூ குருமா | Vazhaipoo Kuruma Recipe In Tamil

ஆரோக்கியம் சம்பந்தமான எந்த ஒரு உணவினை சமைத்துகொடுத்தாலும் வீட்டில் உள்ளவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவது என்பது அரிதான ஒன்றாகும்.எனினும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை வாரத்திற்கு 2 முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய வாழைப்பூ வைத்து செய்யக்கூடிய ஒரு புதுவித வாழைப்பூ குருமா உணவினை பற்றியே இப்பதிவின்மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner, KURUMA
Cuisine: tamil nadu
Keyword: Vazhaipoo Kuruma
Yield: 4
Calories: 250kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ வாழைப்பூ
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 அன்னாசி பூ.
  • 1 பட்டை,கிராம்பு
  • 1 பிரியாணி இ
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு

அரைக்க

  • 4 காய்ந்தமிளகாய்
  • தேங்காய்துருவல் சிறிதளவு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 5 பல் பூண்டு
  • 1 சிறுதுண்டு இஞ்சி

செய்முறை

  • வாழைப் பூவை பிரித்து இதழ்களின் நடிவில் உள்ள நரம்பை நீக்கி, இரண்டிரண்டாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்
  • அரைக்க கொடுத்துள்ளவற்றில் வரமிளகாய், சோம்பு, சீரகம், கசாகசா ஆகியவற்றை பத்து நிமிடம் கால் டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்
  • வெங்காயம், தக்காளியை சிறிது பெரியதாக நறுக்கவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி, தாளிக்க வைத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  • எண்ணை பிரிந்ததும் வாழைப் பூவை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலாவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி ஊற்றி பத்து நிமிடம் கொதிக்கவிடவும். வாழைப்பூ குருமா ரெடி இறக்கி வைத்து கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்

Nutrition

Serving: 500g | Calories: 250kcal | Carbohydrates: 12g | Fat: 0.4g | Saturated Fat: 0.1g | Sodium: 62mg | Potassium: 294mg | Fiber: 5.9g | Calcium: 66mg | Iron: 15mg