Advertisement
சைவம்

காரக்குழம்பு, புளி குழம்புக்கு ஏற்ற சூப்பரான ஒரு வாழைப்பூ பொரியல் அவசியம் இப்படி செய்து பாருங்க!

Advertisement

தென்னை மரத்திலையும் வாழை மரத்திலையும் இருக்க ஒவ்வொரு பாகங்களும் நமக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. தென்னை மரத்தில் இருக்கிற பாகங்கள் கூட நம்ம உடம்புக்கு நல்லதுன்னு சொல்ல முடியாது. ஆனா வாழை மரத்தில் இருக்கிற ஒவ்வொரு பாகங்களும் நம்ம சாப்பிடுறதுக்கும் உடலுக்கும் ரொம்ப ஆரோக்கியமானது என்று சொல்லலாம். வாழைத்தண்டு சாப்பிட்டா சிறுநீர் பிரச்சினைகளுக்கு சிறுநீரில் கற்கள் ஏற்படாமல் இருப்பதற்கு ரொம்பவே நல்லது.

வாழைக்காய் வச்சு வறுவல் செஞ்சா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். அந்த வகையில வாழைப்பூ வச்சு நம்ம வடை செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இன்னைக்கு ரொம்ப சிம்பிளான ஒரு வாழைப்பூ பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த வாழைப்பூ பொரியல் செய்வதற்கு ரொம்பவே குறைவான பொருட்கள் மட்டுமே நமக்கு தேவைப்படும் ஆனா டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும் கார குழம்புக்கு இதை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்.

Advertisement

வாரத்துல ஒரு தடவையாவது இந்த வாழைப்பூ பொரியல் நம்ம சாப்பிட்டோம்னா சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையோட அளவு குறைவாகும். ரத்த சோகையில் உள்ளவர்களுக்கும் ரொம்பவே நல்லது அதுக்கும் மேல சிறுநீர் கற்கள் ஏற்பட்டது சரியாகும். இந்த மாதிரி பலவிதமான நன்மைகள் இருக்கக்கூடிய இந்த வாழைப்பூவ சின்ன குழந்தைகள் இருந்தே உங்க குழந்தைகளுக்கும் கொடுத்து பழகுங்க சாப்பிட மாட்டேன் பரவால்ல கட்டாயப்படுத்தி கூட அதை சாப்பிட வைங்க என அவ்வளவு நல்லது உடம்புக்கு. இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான சுவையான ரொம்ப சிம்பிளான ஒரு வாழைப்பூ பொரியல் எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்

வாழைப்பூ பொரியல் | Vazhaipoo Poriyal Recipe In Tamil

Print Recipe
வாழைக்காய் வச்சு வறுவல் செஞ்சா
Advertisement
சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். அந்த வகையில வாழைப்பூவச்சு நம்ம வடை செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இன்னைக்கு ரொம்ப சிம்பிளான ஒரு வாழைப்பூபொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த வாழைப்பூ பொரியல் செய்வதற்கு ரொம்பவேகுறைவான பொருட்கள் மட்டுமே நமக்கு தேவைப்படும் ஆனா டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்கார குழம்புக்கு இதை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்.
Advertisement
இந்த மாதிரி பலவிதமான நன்மைகள் இருக்கக்கூடிய இந்தவாழைப்பூவ சின்ன குழந்தைகள் இருந்தே உங்க குழந்தைகளுக்கும் கொடுத்து பழகுங்க சாப்பிடமாட்டேன் பரவால்ல கட்டாயப்படுத்தி கூட அதை சாப்பிட வைங்க என அவ்வளவு நல்லது உடம்புக்கு.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Vazhaipoo poriyal
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 238

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 வாழைப்பூ
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் வாழைப்பூவை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  • பிறகு வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு தாளித்து கொள்ளவும்
  • கருவேப்பிலை காய்ந்த மிளகாய் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
  • அனைத்தும் வதங்கிய பிறகு வாழைப்பூவை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறிய பிறகு தேங்காய் துருவல் சேர்த்துஇறக்கினால் சூப்பரான சிம்பிளான வாழைப்பூ பொரியல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 12g | Potassium: 381mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான வாழைப்பூ தோசை ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement
Ramya

Recent Posts

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

7 நிமிடங்கள் ago

டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட ஒரு குடைமிளகாய் சாதம் செய்து கொடுத்தால், அனைத்தும் காலியாகி விடும்!!!

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…

2 மணி நேரங்கள் ago

நெத்திலி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…

3 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!

ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…

3 மணி நேரங்கள் ago

இரவு டிபனுக்கு ருசியான மதுரை கொத்து இட்லி இப்படி செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

தென்னிந்திய உணவு வகைகளில் இட்லிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 90 சதவீதம் பேர் இட்லியை காலை மாலை…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 மே 2024!

மேஷம் இன்று பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று வணிகஸ்தர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட…

8 மணி நேரங்கள் ago