Home காலை உணவு வீடே மணக்க மணக்க ருசியான வாழைப்பூ தோசை ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

வீடே மணக்க மணக்க ருசியான வாழைப்பூ தோசை ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அந்த வகையில் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க இன்று நாம் வாழைப்பூ தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை. வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது!

-விளம்பரம்-

அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும். வழக்கமாக நாம் ராகி தோசை அல்லது கோதுமை தோசை வைத்து தான் தோசை செய்வோம். இன்று நாம் வாழைப்பூ சேர்த்து ஆரோக்கியமான மற்றும் சத்தான சுவையான தோசையை எளிமையாகவும், சுவையாகவும் எப்படி செய்வதென்று பார்க்கலாம். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட.

Print
No ratings yet

வாழைப்பூ தோசை | Vazhaipoo Dosa Recipe In Tamil

பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அந்த வகையில் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க இன்று நாம் வாழைப்பூ தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை. வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது!
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Vazhaipoo Dosa
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வாழைப்பூ
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சோம்புத்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, கொத்த மல்லி, வாழைப்பூ ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாழைப்பூவை ஒரு கடாயில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் வாழைப்பூவை சேர்த்து வதக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்பு தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை வார்த்து அதன் நடுவே வாழைப்பூ மசாலாவை பரப்பி நெய் ஊற்றி வேக விட்டு தோசையை மடித்து எடுத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பூ தோசை தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 105kcal | Carbohydrates: 2.7g | Protein: 3.1g | Fat: 0.4g | Sodium: 6mg | Potassium: 358mg | Fiber: 2.1g | Vitamin A: 4IU | Vitamin C: 17mg | Calcium: 5mg | Iron: 2mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான வெஜ் கறி தோசை அவசியம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க எவ்வளவு தோசை கொடுத்தாலும் சாப்பிடுவாங்க!