- Prep
- 5 min
- Cook
- 8 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Breakfast
தோசைக்கல்ல பல வெரைட்டிகள் வந்துடுச்சு விதவிதமான தோசைகள் செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி விதவிதமான தோசைகள் சாப்பிட்டே இருந்தாலும் இப்போ புதுசா நம்ம சாப்பிட்டு இருக்க தோசை கறி தோசை. அருமையான கறி தோசை செய்றாங்க ரொம்பவே சுவையா இருக்கு இந்த கறி தோசை.
எப்பவும் மட்டன், சிக்கனை வச்சு கறி தோசை செய்து சாப்பிட்டு இருக்க நாம் இப்போது ஆரோக்கியமான காய்கறிகளை வச்சு வெஜ் கறி தோசை செய்ய போறோம். இந்த கறி தோசைய வீட்ல சுவையா அதாவது எவ்வளவு சுலபமாக இந்த வெஜ் கறி தோசை சீக்கிரம் செய்து முடிக்க முடியும்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த வெஜ் கறி தோசை ரொம்ப சுவையா ரொம்ப சுலபமாக வீட்டில் செய்து முடிச்சிடலாம்.
இந்த வெஜ் கறி தோசை மேல சிறியவர்கள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. தோசை அப்படின்னாலே எட்டு அடி தூரம் தள்ளி போறவங்களா அப்போ அவங்களுக்கு இந்த மாதிரி வெஜ் கறி தோசை செய்து கொடுத்தீங்கன்னா தோசையே சாப்பிடாதவங்க கூட சும்மா வெஜ் கறி தோசையை சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ ஒரு சுவையா இருக்கும்.
இதையும் படியுங்கள் : சாம்பார், சட்னியே தேவையில்லை காரசாரமான பூண்டு தோசை இப்படி செஞ்சி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். சுடு தண்ணீரில் காலிஃப்ளவர் உப்பு சேர்த்து ஊற வைத்து அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீல் மேக்கரை வெந்நீரில் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து வேகவைத்து தண்ணீரை பிழிந்து எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளி, புதினா சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பிறகு அதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கலந்து விட்டு காய்கறி வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் , உப்புசேர்த்து வேக வைத்து கொள்ளவும்.காய்கறிகள் வேகுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை காய்கறிகளில்சேர்த்து நன்றாக மூடி போட்டு விசில் விடவும். காய்கறிகள் நன்றாக வெந்து வந்து பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து தோசை ஊற்றிஅதில் இந்த காய்கறி மசாலாவை சேர்த்து நடுவில்வைத்து மேலே எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.
தோசை வெந்து பிறகு சூடாகபரிமாறினால் சுவையான வெஜ் கறி தோசை தயார்.






