வாழைப்பூ வாங்கினால் ஒரு முறை இப்படி உருண்டை குழம்பு செய்து பாருங்கள் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்!!!
கோலா உருண்டை குழம்பு என்றவுடன் எல்லார் நினைவுக்கு வருவது மட்டன் மற்றும் சிக்கன் கோலா உருண்டை தான். ஆனால் நாம் இன்று மட்டன் கோலா உருண்டைக்கே ஈடு கொடுக்கும் அளவிற்க்கு சுவையான வாழைப்பூ கோலா உருண்டை எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட கா
கோலா உருண்டை குழம்பு என்றவுடன் எல்லார் நினைவுக்கு வருவது மட்டன் மற்றும் சிக்கன் கோலா உருண்டை தான். ஆனால் நாம் இன்று மட்டன் கோலா உருண்டைக்கே ஈடு கொடுக்கும் அளவிற்க்கு சுவையான வாழைப்பூ கோலா உருண்டை எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது!
அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு போரடித்து விட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியானால் அந்த வாழைப்பூவைக் கொண்டு ஒரு உருண்டை தயாரித்து, குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இந்த வாழைப்பூ உருண்டை குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். பொதுவாக வாழைப்பூ போன்ற வகைகளை குழந்தைகள் சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். எனவே அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய விதத்தில் சமைத்து தந்தால் சத்தம் மில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். இந்த வாழைப்பூ உருண்டை குழம்பு குழந்தைகள் சாப்பிட ஒரு நல்ல தேர்வு மற்றும் நல்ல மாற்றாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சாம்பார் இப்படி செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!!!