இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற வாழைப்பூ வடகறி இப்படி செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்!!!
வடகறி என்பது மிகவும் பிரபலமான ஒரு தென்னிந்திய ரெசிபி. இந்த வடகறி இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த வடகறி ரெசிபியானது வடையைக் கொண்டு செய்யக்கூடியது. தென்னிந்தியர்கள் பெரும்பாலானோருக்கு இந்த வடகறி விருப்பமான ரெசிபியாக இருக்கும். இதை பல
வடகறி என்பது மிகவும் பிரபலமான ஒரு தென்னிந்திய ரெசிபி. இந்த வடகறி இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த வடகறி ரெசிபியானது வடையைக் கொண்டு செய்யக்கூடியது. தென்னிந்தியர்கள் பெரும்பாலானோருக்கு இந்த வடகறி விருப்பமான ரெசிபியாக இருக்கும். இதை பலரும் கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். என்னதான் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் செய்து சாப்பிட்டாலும் வடகறி என்றால் அலாதி சுவை தான்.
வடகறி அப்படின்னு சொல்லும் போதே வாசம் நம்ம வீட்டுல வீசுது. அந்த அளவிற்கு மசாலா வாசனை நிறைந்தது. நறுமண பொருட்களுடன் வடகறியின் மணமும், சுவையும் பலரையும் சுண்டி இழுக்கும், பெரிய பெரிய ஹொட்டல்களை விட தெருவோர தள்ளுவண்டி கடையில் காரசாரமாக இருக்கும். அந்த ஸ்டைலில் வீட்டிலேயே வாழைப்பூ வடகறி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம். வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.
வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது! அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. சட்னி, குருமா, சாம்பார் என ஒரே வகையான சைடு டிஷ் சாப்பிட்டு சலித்துப்போனவர்கள் இந்த வாழைப்பூ வடகறியை முயற்சி செய்யலாமே!
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சாம்பார் இப்படி செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!!!