- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
வடகறி என்பது மிகவும் பிரபலமான ஒரு தென்னிந்திய ரெசிபி. இந்த வடகறி இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த வடகறி ரெசிபியானது வடையைக் கொண்டு செய்யக்கூடியது. தென்னிந்தியர்கள் பெரும்பாலானோருக்கு இந்த வடகறி விருப்பமான ரெசிபியாக இருக்கும். இதை பலரும் கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். என்னதான் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் செய்து சாப்பிட்டாலும் வடகறி என்றால் அலாதி சுவை தான்.
வடகறி அப்படின்னு சொல்லும் போதே வாசம் நம்ம வீட்டுல வீசுது. அந்த அளவிற்கு மசாலா வாசனை நிறைந்தது. நறுமண பொருட்களுடன் வடகறியின் மணமும், சுவையும் பலரையும் சுண்டி இழுக்கும், பெரிய பெரிய ஹொட்டல்களை விட தெருவோர தள்ளுவண்டி கடையில் காரசாரமாக இருக்கும். அந்த ஸ்டைலில் வீட்டிலேயே வாழைப்பூ வடகறி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம். வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.
வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது! அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. சட்னி, குருமா, சாம்பார் என ஒரே வகையான சைடு டிஷ் சாப்பிட்டு சலித்துப்போனவர்கள் இந்த வாழைப்பூ வடகறியை முயற்சி செய்யலாமே!
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சாம்பார் இப்படி செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!!!
Ingredients
Method
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து விட்டு பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
பின் வாழைப்பூவுடன் கடலைமாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் இந்த கலவையில் சிறிதளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின் இந்த வடையை சிறிய துண்டுகளாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித்தூள், சோம்பு தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தக்காளி விழுதை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் வாழைப்பூ வடைகளை சேர்த்து கலந்து விடவும்.
பின் தேங்காய் பால் சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ வடகறி தயார். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி உடன் பரிமாறலாம்.






