வெயில் காலத்தில் காலை பழைய சாதம் ஊறுகாய் இருந்தால் போதும் என்பது போல் இருக்கும். மாங்காய் சீசனும் தொடங்கி விட்டது. மாங்காய் நெல்லிக்காய் ஒருகை போல் இல்லாமல் அனைத்து சீசனிலும் கிடைக்கும் வெஜிடபிள் வைத்து ஊறுகாய். அனைவரும் வீட்டில் மாங்காய் ஊறுகாய் போடுவது வழக்கம்.
இந்த முறை நீங்கள் வெஜிடபிள் ஊறுகாய் கீழே குறிப்புட்டுள்ளது போல செய்து பாருங்கள் தயிர் சாதம், சாம்பார் சாதம் இப்படி அனைத்திற்கும் உங்கள் ஊறுகாயின் சுவை தூக்கலாக இருக்கும்.வெஜிடபிள் ஊறுகாய் இப்படி செய்து வைத்தால் 1 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது! சுவையான வெஜிடபிள் ஊறுகாய் எளிதாக செய்வது எளிது.
காய்கறிகளை வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மைகளை கொடுக்க கூடியது ஆகும். காய்கறிகளை எந்த வகையில் நாம் உணவில் சேர்த்து வந்தாலும் உங்கள் சத்துக்கள் அதிகரிக்கத் துவங்கும் என்பார்கள். இப்படி வெஜிடபிள் ஊறுகாய் செய்து வைத்தால்,திகட்டாது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சரி சுவை மிகுந்த ‘வெஜிடபிள் ஊறுகாய் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
வெஜிடபிள் ஊறுகாய் | Vegetable Pickle Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 காலிஃப்ளவர்
- 250 கிராம் பீன்ஸ்
- 250 கிராம் கேரட்
- 4 பச்சைமிளகாய்
- 1/2 கப் வினிகர் அரை கப்
- 1/2 கப் நல்லெண்ணெய்
- 1 பெரியகரண்டி கடுகு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- கேரட், பீன்ஸை விரல் நீள துண்டுகளாக நறுக்கி அதை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
- காலிஃப்ளவரை பூக்களாக எடுத்து அதை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளை முதல் நாள் இரவேகழுவி நறுக்கி ஒரு துணியில் மேலே போட்டு இரவு முழுவதும் உலரவிடவும்
- காலையில் கடுகை பொடி செய்துக் கொள்ளவும்.
- ஒரு காய்ந்த ஜாடியில் காய்கறிகளை போட்டு எண்ணெய், வினிகர், கடுகு பொடி, உப்பு எல்லாம் போட்டு நன்குகுலுக்கி வைத்து அடுத்த நாள் சாப்பிடவும்.
- சுவையான ப்ரெஷ் வெஜிடபிள் ஊறுகாய் தயார்.