Advertisement
சைவம்

சுட சுட செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க!

Advertisement

இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று செட்டிநாடு வெணடைக்காய் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த செட்டிநாடு வெண்டைக்காய் சாதத்தை செய்து கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும். அது மட்டும் இல்லாமல் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

இதையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான முட்டை மசாலா சாதம் செய்வது எப்படி ?

Advertisement

ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த வெண்டைக்காய் சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்களையும் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள். அதனால் இன்று இந்த சுவையான செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் | Chttinad Vendaikkai Sadam Recipe in Tamil

Print Recipe
இன்று செட்டிநாடு வெணடைக்காய் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த செட்டிநாடு வெண்டைக்காய் சாதத்தை செய்து கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும். அது மட்டும் இல்லாமல் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த வெண்டைக்காய்
Advertisement
சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்களையும் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Vendaikkai, வெண்டைக்காய்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Calories 163

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Ingredients

  • 2 கப் சாதம்
  • 100 கிராம் வெண்டைக்காய்
  • 1 tbsp புளி கரைசல்
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகு தூள்
  • 1 tsp கடலை பருப்பு
  • 8 முந்திரி பருப்பு
  • 1  tbsp எண்ணெய்
  • 1 tsp கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • அதன் பின்பு வெங்காயம் பொன்னிறமாக நன்றாக வதங்கியதும் பின்பு வெண்டைக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தீயை மிதமாக ஏறிய விட்டு பத்து நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.
  • பின் வெண்டைக்காய வெந்ததும் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பட்டை பொடி, மிளகுத்தூள், உப்பு, கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து வெண்டைக்காயை நன்றாக கிளறி விட்டு வேக வைக்கவும்.
  • பின் மற்றொரு கடாயை எடுத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி இட்டு பொரிந்ததும் அதில் வெண்டைக்காயை கலவையைச் சேர்க்கவும். அதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • குறைவான தீயில் 5 நிமிடங்கள் கிளறி விட்டு உப்பு சரிபார்த்து அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் தயார்.

Nutrition

Serving: 560gram | Calories: 163kcal | Carbohydrates: 7g | Protein: 16g | Fat: 1g | Saturated Fat: 0.1g | Cholesterol: 3mg | Potassium: 378mg | Fiber: 14g | Sugar: 1g | Vitamin A: 11IU | Iron: 3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

3 நிமிடங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

15 நிமிடங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

1 மணி நேரம் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

4 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

4 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

6 மணி நேரங்கள் ago